நடிப்பவர்களுக்கு வாக்களித்தால் மக்கள் பிரச்சனை தீராது.. நேரடியாக அடித்த பிரேமலதா விஜயகாந்த்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிப்பவர்களுக்கு வாக்களித்தால் மக்கள் பிரச்சனைகள் தீராது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ரீல்ஸ், போட்டோஷூட் செய்பவர்களை தான் மக்கள் நம்புகிறார்கள் என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், யார் மக்களுக்காக உழைக்கிறார்களோ அவர்கள் மக்களுக்கு துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. அதிமுகவில் இருந்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர்களுக்கு தவெகவில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தவெகவினர் மத்தியிலேயே அதிருப்தி எழுந்துள்ளது. இதனால் 2 தொகுதிகளிலும் முதல்வர் விஜய் 2 நாட்கள் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

Premallatha Vijayakant

ஏற்கனவே மதுராந்தகத்தில் விஜய் நேற்று பிரச்சாரம் நடத்தி இருக்கிறார். இதன் பின் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் விஜய் ரோடு ஷோ மேற்கொள்ள உள்ளார். இதேபோல் தாராபுரத்திலும் பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டம் மற்றும் ரோடு ஷோவுக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால் தவெகவுக்கு சாதகமாக இன்னும் கூட்டணி கட்சியினர் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய களமிறங்கவில்லை.

ஆனால் திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக மதுராந்தகத்தில் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறது. மறுபக்கம் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஆளுங்கட்சி களத்திற்கு வராமல் அங்கேயே உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. மக்கள் ஓட்டு போட்டு இருக்கிறார்கள். அனைவரும் களத்திற்கு வர வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டைக்கு பத்து ரூபாய் பத்தாது. விலைவாசி அந்த அளவிற்கு ஏறிவிட்டது. இந்த விஷயத்துல் அரசு கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அரசின் கவனம் வேறு விஷயத்தில் உள்ளது. இடைத்தேர்தல் வேறு வந்துவிட்டது,. தேவையில்லாமல் ராஜினாமா செய்து இவர்களாகவே ஒரு இடைத்தேர்தலை கொண்டு வந்துவிட்டார்கள்.

நேர விரயம் மட்டுமல்லாமல் பண விரயமும் கூட.. லஞ்சமே இல்லாத நேர்மையான ஆட்சி என்கிறார்கள். யார் மக்களுக்காக பேசுகிறார்கள், யார் மக்களுக்காக உழைக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ரீல்ஸ் போடுவது, போட்டோஷூட் செய்பவர்களை தான் மக்கள் நம்புகிறார்கள். யார் மக்களை நேசிக்கிறார்கள், யார் மக்களுக்காக உழைக்கிறார்கள் என்று பார்த்து அவர்களுக்கு மக்கள் துணை நிற்க வேண்டும். நடிப்பர்வகளுக்கு வாக்களித்தால், பிரச்சனை தீராது என்றும் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+