இனிமேல் தான் ஆட்டம்.. கூட்டணி 4 திசையிலும் போய்க்கொண்டு இருக்கிறது. சஸ்பென்ஸ் வைக்கும் ஓபிஎஸ் டீம்
சென்னை: கூட்டணி நல்ல முறையில் போய்க்கொண்டு இருக்கிறது. நான்கு திசையிலும் போய்க்கொண்டு இருக்கிறது. எதிரிகளை தவிக்க வைக்கும் அளவுக்கு விருப்ப மனு வாங்க வந்தவர்களின் கூட்டம் உள்ளது. இனிமேல் தான் ஆட்டம் மாறப்போகிறது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் கூட்டணி, மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணியில் கட்சிகளின் தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை. பாஜக தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்ற விவரம் வெளியாகவில்லை.

ஓபிஎஸ், மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பாஜக கூட்டணிகு செல்லலாம் என்று கூறப்பட்டாலும் இதுவரை அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகவிலை. தாமரைச் சின்னத்தில் போட்டியிட பாஜக அறிவுறுத்தியதாகவும்,.. ஆனால், இதை டிடிவி தினகரன் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒன்றை தொடங்கியுள்ளார்.
பாஜகவுடன் தான் கூட்டணி என ஓபிஎஸ் கூறிவந்தாலும் பாஜக இதுவரை அவரை அழைத்து பேசவில்லை. இதனால், ஓபிஎஸ் தரப்பு சற்று அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் லோக்சபா தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பாக போட்டியிட விரும்புவோர் இன்று நேர்காணலில் கலந்து கொள்ள ஓ பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்திருக்கிறார்.
இன்று காலை முதல் ஓ பன்னீர் செல்வம் அணி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களின் விருப்ப மனுவை பெற்று விண்ணப்பிக்கலாம் என்று ஓபிஎஸ் அறிவித்தார். இது தொடர்பாக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஓ பன்னீர் செல்வம் அணி சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனுவை பெற்று செல்கிறார்கள் என்றும், கூட்டணி 4 திசையிலும் போய்க்கொண்டு இருக்கிறது.. இனி தான் ஆட்டம் மாறப்போகிறது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறியதாவது:- ஒருங்கிணைப்பாளருக்காக இங்க நிறைய ஏகப்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டதை நீங்கள் பார்த்தீர்கள். இதேபோல் பத்து பத்து மாவட்டங்களாக பிரித்து இங்கே வரிசையில் நின்று பணத்தை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஓ பன்னீர் செல்வம் இங்கே மேற்பார்வையிட வருவேன் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்று 6 மணிக்கு மேல் நேர்காணல் நடக்கிறது.
இதற்காக ஓபிஎஸ் தலைமையில் நிர்வாகிகள் செய்துகொண்டு இருக்கிறார்கள். கூட்டணி நல்ல முறையில் போய்க்கொண்டு இருக்கிறது. 4 திசையிலும் போய்க்கொண்டு இருக்கிறது. எதிரிகளை தவிக்க தவிக்க ஆக்கியிருக்கிறது. இப்போது கூட்டத்தை பார்த்து இருப்பீர்கள். இனிமேல் தான் ஆட்டம் மாறப்போகிறது.
எல்லாருடைய கவனமும் இங்கே தான் இருக்கிறது. கழக ஒருங்கிணைப்பாளர் தொடர்ந்து எதை சொல்லிக்கொண்டு வந்தாரோ.. எதை விரும்பினாரோ.. எதை நாட்டு மக்கள் விருப்பம் என்று அறிந்து செயல்பட்டு அதை திரும்ப திரும்ப செய்தாரோ.. அந்த நேரம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது.. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா.. நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா என்று சொல்கிறேன். என்று பேசினார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications