கூடுதல் கட்டணம் இல்லை.. ஏசி 2-ம் வகுப்பில் பயணிக்க சான்ஸ்! வெயிட்டிங் லிஸ்ட் பயணிகளுக்கு குட் நியூஸ்
சென்னை: ரயிலில் 3 ஆம் வகுப்பு ஏசி பெட்டிகள் அல்லது 2 ஆம் வகுப்பு ஏசி பெட்டிகளில் டிக்கெட் புக் ஆகாமல் காலியாக இருந்தால், ரயிலில் செகண்ட் ஸ்லீப்பர் பெட்டியில் புக் செய்து டிக்கெட் கிடைக்காமல் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் பயணிகளுக்கு ஆட்டோ அப்கிரடேஷன் முறையில் 2 ஆம் வகுப்பு ஏசி பெட்டியிலோ, அல்லது 3 ஆம் வகுப்பு ஏசி பெட்டியிலோ கூடுதல் கட்டணம் இன்றி இருக்கைகள் உறுதி செய்யப்படும் வசதி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும் வைகை மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. முன்பு வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த நடைமுறை அமலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரயிலில் ஆட்டோ அப்கிரடேஷன் முறையில் கூடுதல் சலுகைகளை ரயில்வே அறிவித்து இருப்பது பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஆட்டோ அப்கிரடேஷன் முறை
பயணிகளின் போக்குவரத்து சேவைக்கு பெரும் வரப்பிரசாதமாக ரயில் சேவை இருந்து வருகிறது. பஸ்களை விட ரயில்களில் செல்வதற்கே பயணிகள் அதிகம் விரும்புகிறார்கள். ரயில்வேயும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்கு ஏற்ப பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ரயில் சேவைகளை அதிகரிப்பது, ரயில் பெட்டிகளை அதிகப்படுத்துவது, வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை குறைப்பது, புதிய வழித்தடங்கள் அமைப்பது என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை செய்து வருகிறது.
தெற்கு ரயில்வேயில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. கோடைக்காலத்தில் சிறப்பு ரயில் சேவைகளையும் ரயில்வே அறிவித்து வருகிறது. இந்த நிலையில் பயணிகளுக்கு இன்னொரு கூடுதல் சலுகையினை அறிவித்துள்ளது. அதாவது ரயிலில் ஆட்டோ அப்கிரடேஷன் முறையில் கூடுதல் சலுகைகளை ரயில்வே அறிவித்துள்ளது.
2 ஆம் வகுப்பு ஏசி பெட்டி
தெற்கு ரயில்வேயில் ரயிலில் பயணிக்க முன்பதிவு டிக்கெட்டுகள் ஐஆர்சிடிசி இணையதளத்திலோ அல்லது நேரில் ரயில் நிலையத்திலே புக் செய்ய முடியும். பண்டிகை காலங்களிலோ, வார விடுமுறையிலோ, முகூர்த்த நாட்களிலோ சொந்த ஊர் செல்ல பலரும் டிக்கெட்களை ஒரு மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்து விடுகிறார்கள். இதனால் சீக்கிரமாகவே ரயிலில் டிக்கெட் காலியாகிவிடுகிறது.
ஆனால் ஒரு சில நேரங்களில் கடைசி நேரத்தில் டிக்கெட்டை யாராவது கேன்சல் செய்தால், ஏசி கோச்களில் டிக்கெட் காலியாக இருக்கும். 3 ஆம் வகுப்பு ஏசி மற்றும் 2 ஆம் வகுப்பு ஏசி பெட்டிகளில் ஒரு சில இருக்கைகள் காலியாக ஆகும் சூழலில், ஆட்டோ அப்கிரடேஷன் முறையில் செகண்ட் ஸ்லீப்பர் புக் செய்து காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு இந்த இருக்கை கிடைத்துவிடும் வகையில் கூடுதல் சலுகைகளை ரயில்வே அறிவித்துள்ளது.
பல்லவன், வைகை ரயில்களிலும் அமல்
முன்பு இந்த வசதி அமலில் இருந்தாலும், 2 ஆம் வகுப்பு ஏசி பெட்டிக்குள் காலியாக இருக்கும் இருக்கைக்கு கிடைக்காது. 3 ஆம் வகுப்பு ஏசி பெட்டியில் பயணிக்க மட்டுமே இந்த வசதி இருந்தது. தற்போது 3 ஆம் வகுப்பு மற்றும் 2 ஆம் வகுப்பு ஏசி பெட்டியில் இருக்கைக்கள் காலியாக இருந்தால், செகண்ட் ஸ்லீப்பர் டிக்கெட் புக் செய்திருந்து டிக்கெட் கிடைக்காதவர்கள் இந்த பெட்டிகளில் அதே கட்டணத்தில் (புதிதாக எந்த கட்டணமும் செலுத்த வேண்டாம்) பயணம் செய்ய முடியும்.
மேலும் இந்த வசதியானது வைகை மற்றும் பல்லவன் ஆகிய இருக்கை வசதிகள் கொண்ட ரயில்களில் இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. எனவே இனிமேல் செகண்ட் சிட்டிங் புக் செய்து காத்திருப்பவர்களுக்கு, ஏசி பெட்டிகளில் இருக்கைகள் காலியாக இருந்தால் டிக்கெட் கிடைக்கும். ரயில்வேயின் இந்த அறிவிப்புகள் பயணிகள் வரவேற்பு தெரிவித்ததோடு மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications