போதி தர்மர் மாவட்டம்.. மோடிக்கு விஷ்ணு பிரசாத் வைத்த டைமிங் கோரிக்கை
Recommended Video
சென்னை: புதிதாக உருவாகும் மாவட்டத்திற்கு போதி தர்மர் மாவட்டம் என பெயரிடுமாறு காங்கிரஸ் செயல் தலைவரும், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் விஷ்ணு பிரசாத் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
விஷ்ணு பிரசாத் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
சீன அதிபருடன் தமிழ்நாட்டில், குறிப்பாக மாமல்லபுரத்தில் நீங்கள் நடத்த உள்ள சந்திப்பு வெற்றிபெற வாழ்த்துகிறேன். இந்த நேரத்தில் மகாபலிபுரம் பற்றிய சில உண்மைகளை கூறுவது எனது பிரதான கடமையாகும். பல்லவ மன்னர்களால் உருவாக்கப்பட்ட கட்டிடக்கலை மற்றும் சிற்பங்கள் மகாபலிபுரத்தின் பிரதான அம்சம் ஆகும்.

5வது நூற்றாண்டில், இப்போதைய காஞ்சிபுரம் மாவட்டத்திலும், மகாபலிபுரம் மாவட்டத்தில் பல்லவ ராஜாவிற்கு 3வது இளவரசராக பிறந்தவர் போதி தர்மர். பல்லவ இராச்சியம் நிறுவப்பட்ட காஞ்சீபுரம் மாவட்டத்திலும் அமைந்துள்ளது. போதி தர்மர் ஒரு இளவரசனாகப் பிறந்திருந்தாலும், அவர் துறவை தேர்ந்தெடுத்து பவுத்த கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பவுத்த மடாலயத்தின் 28 வது தலைவரானார். பின்னர் அவர் சீனாவுக்குச் சென்று தற்காப்புக் கலைகளின் தந்தையானார் மற்றும் ஜென் எனப்படும் பவுத்த மத பிரிவை நிறுவினார். சீனாவின் புகழ்பெற்ற பவுத்த பிக்குகளில் ஒருவராக மாறினார்.
முதலில் ஒரு இந்தியராகவும், ஒரு தமிழராகவும் நீங்கள் சீன அதிபரை சந்திப்பதற்காக இந்த மகாபலிபுரத்தை தேர்ந்தெடுத்ததில் பெருமைப்படுகிறேன். போதி தர்மர் தமிழர், அவர் இந்திய பகுதியில் பிறந்தவர். அவர் தனது சித்தாந்தத்தையும் பவுத்த மதத்தின் கொள்கைகளையும் நிறுவி, சீனாவில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமராக நீங்கள் அதை முன்னோக்கி எடுத்துச் சென்று போதி தர்மரின் முக்கியத்துவத்தையும் அவரது போதனைகளையும் நிறுவ வேண்டிய நேரம் வந்துவிட்டது.
போதி தர்மர் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்தியாவில் எங்காவது ஒரு சர்வதேச கலாச்சார மற்றும் மருத்துவ பல்கலைக்கழகத்தை நிறுவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மகாபலிபுரம் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம் மாநில அரசால் சமீபத்தில் இரண்டாக பிரிக்கப்பட்டது. எனவே புதிதாக உருவாகும் மாவட்டத்திற்கு போதி தர்மர் மாவட்டம் என பெயரிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் ஒரு அடையாளமாக இருக்கும் போதி தர்மரின் சிலையை திறக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஷ்ணு பிரசாத் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் இப்போது எந்த ஒரு மாவட்டத்திற்கும் தலைவர்கள் பெயரிட்டு அழைப்பது கிடையாது. உதகமண்டலம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரு மாவட்டங்களை தவிர, பிற அனைத்து மாவட்டங்களுமே, அதனதன் தலைநகரங்களின் பெயரில்தான் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், உதகமண்டலம் மாவட்டத்தின் தலைநகர் ஊட்டி.


-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications