ஏசி போட்டும் கரண்ட் பில் பாதியாக குறைய வேண்டுமா? உங்க AC ரிமோட்டில் இந்த ரகசிய பட்டனை கவனித்தீர்களா
சென்னை: தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் விண்ணைத் தொட்டு வருகிறது.. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே மக்கள் வெப்பத்தின் கொடுமையால் நிலைகுலைந்து போயுள்ளனர்.. இந்த வெப்பத்திலிருந்து தப்பிக்க பலரது வீடுகளிலும் இப்போது ஏசி எந்நேரமும் ஓடிக் கொண்டேயிருக்கன்றன.. ஆனால் ஏசி ஓடும் அதே வேகத்தில் கரண்ட் மீட்டரும் ஓடத்தான் செய்கின்றன. கடைசியில் வரும் கரண்ட் பில்லைப் பார்த்து பலருக்கும் தலைசுற்றல் ஏற்படுகிறது. இதற்கு என்னதான் தீர்வு? கரண்ட் பில்லை எப்படி குறைப்பது?
சாதாரண நடுத்தர குடும்பத்தினர் கூட இப்போது ஏசி பயன்படுத்தும் சூழல் உருவாகியுள்ள நிலையில், மின்சாரக் கட்டணத்தை எப்படிக் குறைப்பது என்பது பலரது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது..

ஏசி கரண்ட் பில்
நிஜமாகவே உங்களது ஏசி ரிமோட்டில் இருக்கும் ஒரு சிறிய பட்டனை சரியாக பயன்படுத்தினாலே, உங்கள் மின்சாரக் கட்டணத்தில் கணிசமான தொகையை உங்களால் மிச்சப்படுத்த முடியும்.
ஏசி வாங்கியது முதல் நாம் பெரும்பாலும் கூல் அதாவது Cool Mode என்ற ஆப்ஷனை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம்.. ஆனால் வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது, நீங்கள் உங்கள் ரிமோட்டில் இருக்கும் டிரை மோடு (Dry Mode) என்ற ஆப்ஷனை தேர்வு செய்தாலே போதும்.
காரணம், இது காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, உங்களது ரூமை சீக்கிரமாகவே குளிர்ச்சியாக்கும்.. இதனால் கம்ப்ரஸர் அதிக நேரம் ஓட வேண்டிய அவசியம் இருக்காது.. இதன் மூலம் மின்சார பயன்பாடு பெருமளவு குறையும் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாகவே இருந்து வருகிறது..
தமிழக மின்சார வாரியம்
அதேபோல் ஏசி வெப்பநிலையை எப்போதும் 24 டிகிரி அல்லது 26 டிகிரியில் வைப்பது மிகச்சிறந்த முறையாகும்.. நாம் அவசரத்திற்கு 16 அல்லது 18 டிகிரியில் வைப்பதால் மட்டும், ரூம் சீக்கிரம் ஜில்லென்று ஆகிவிடாது..
மாறாக அந்த வெப்பநிலையை அடைய கம்ப்ரஸர் மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.. இதனால் மின்சாரம் கண்ணிமைக்கும் நேரத்தில் காலியாகும்..
நீங்கள் 24 டிகிரியில் ஏசியை வைத்துவிட்டு, அதேசமயம் ரூமிலுள்ள ஃபேனையும்) மெதுவான வேகத்தில் ஓடவிட்டால், குளிர்ந்த காற்று அறை முழுவதும் சீராக பரவும்.. இது உங்களுக்கு தேவையான குளிர்ச்சியை தருவதோடு, மின்சார வாரியத்திற்கு நீங்கள் கட்ட வேண்டிய தொகையையும் பாதியாகக் குறைக்கும்..
ஏசி ரிமோட் பட்டன்
இன்னொரு முக்கியமான விஷயமாக பார்க்க வேண்டியது ஏசி மெயின்டனன்ஸ்... ஏசியின் உள்ளே இருக்கும் ஃபில்டர்களை வாரம் ஒருமுறை நீங்களே கழற்றி சுத்தம் செய்ய வேண்டும்..
ஒருவேளை பில்டரில் தூசி அடைத்துக்கொண்டால், காற்றை வெளியே தள்ள ஏசி அதிக சக்தியைப் பயன்படுத்தும்.. இது கார் டயர் பஞ்சராக இருக்கும்போது வண்டியை ஓட்டுவதற்கு சமம்..
அதுமட்டுமல்ல, பகல் நேரங்களில் ஜன்னல் ஸ்கிரீன்களை மூடி வைப்பதன் மூலம் வெளியிலிருந்து வரும் வெப்பத்தைத் தடுக்கலாம்.. இதனால் ஏசி போடும்போது ரூம் சீக்கிரம் குளிர்ந்துவிடும்.. இரவு நேரங்களில் ஸ்லீப் மோடு (Sleep Mode) பயன்படுத்துவது மின்சாரத்தை குறிப்பிட்ட அளவு சேமிக்க உதவும்.. இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே வெயிலின் கொடுமையிலிருந்தும் தப்பிக்கலாம், அதே சமயம் உங்கள் பாக்கெட்டில் இருக்கும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம்..!!












Click it and Unblock the Notifications