விமானத்தில் நார்மல் ரேட்டில் பிசினஸ் கிளாஸ் சொகுசு வேணுமா? பயணிகள் பலருக்கும் தெரியாத சீக்ரெட்!
சென்னை: பொதுவாக விமானங்களில் பயணம் செய்யும் போது பயணிகள் டிக்கெட் விலையை மட்டுமே செக் செய்துவிட்டு புக் செய்து விடுவார்கள். ஆனால் விமானத்தில் உள்ள ஒரு வரிசையில் மட்டும் இருக்கும் சில சீட்களுக்கு ஒரு ஸ்பெஷல் இருக்கிறது. சாதாரணமாக எல்லா பயணிகளும் இதனை புக் செய்யலாம். அப்படி இந்த சீட்டில் என்ன ஸ்பெஷல் என்று யோசிக்கிறீர்களா? அது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
விமானத்தில் பிற இருக்கைகளை விட சற்று கூடுதல் வசதியுடன் கூடிய சீட்கள் எதுவென்றால், எமெர்ஜென்சி எக்ஸிட் பகுதியை ஒட்டியுள்ள சீட்கள்தான். இதன் அருகில் இருக்கக் கூடிய இருக்கைகள், பிற இருக்கைகளை விட இடைவெளி அதிகம் கொண்டதாகும். இதனால் பயணிகள் கால்களை நன்றாக நீட்டி அமர்ந்து பயணிக்க முடியும்.

விமானத்தில் ஸ்பெஷல் இருக்கை
பார்ப்பதற்கு மற்ற இருக்கைகளைப் போலவே இருப்பதால் பயணிகள் இதனை பெரிதும் கவனித்து இருப்பார்கள். இருக்கைகளுக்கு என்று தனியாக ஸ்பெஷல் இல்லை. ஆனால், இடவசதி கொஞ்சம் அதிகமாக இருக்கும். மற்ற இருக்கைகளுடன் ஒப்பிடும்போது சற்று அகலமானதாக இருக்கும். விமானங்களில் மற்ற சீட்களை விட இதில் கொஞ்சம் சொகுசாக பயணிக்க முடியும்.
குறிப்பாக உயரமாக இருப்பவர்களுக்கும் சற்று பருமனாக இருப்பவர்களுக்கும் இந்த சீட் மற்ற இருக்கைகளை விட சவுகரியமாக இருக்கும். பிசினஸ் கிளாஸ் போல கொஞ்சம் இடவசதியோடு இருக்கும் என்று கூட சொல்லலாம். எமர்ஜென்சி எக்சிட் அருகே உள்ள இந்த இருக்கையை பற்றிய ரகசியம் அறிந்த பயணிகள், டிக்கெட் புக் செய்யும் போது இந்த இருக்கைகளையே தேர்வு செய்வார்கள்.
கூடுதல் கவனத்துடன் பயணிக்கனும்
அதே நேரத்தில் எமெர்ஜென்சி எக்ஸ்டி அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் போது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் பயணிக்க வேண்டியதும் அவசியம் ஆகும். தப்பித்தவறி திறந்துவிட்டால் பெரும் சிக்கல்கள் வந்து சேரக்கூடும். எமெர்ஜென்சி சீட் இருக்கைகளில் அமரும் பயணிகளுக்கு இறங்கும் போது சில நேரங்களில் முன்னுரிமையும் அளிக்கப்படும்.
மற்ற சீட்களை விட இதில் கொஞ்சம் கூடுதல் குளிராக உணர முடியும். இது பயணிகளுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். இதன் காரணமாக பயணிகள் இந்த இருக்கைகளுக்கு கொஞ்சம் கூடுதல் முன்னுரிமை கொடுப்பதால், சில விமான நிறுவனங்கள் எமர்ஜென்சி எக்சிட் இருக்கைகளைத் தேர்வு செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன.
எல்லாராலும் அந்த சீட்டை புக் செய்ய முடியாது
இருந்தாலும், பிசினஸ் கிளாஸ் அல்லது பிரீமியம் எகனாமி வகுப்பில் பயணிப்பதற்கான கட்டணத்துடன் ஒப்பிடும்போது இது மிக மிக குறைவுதான். இந்தியாவில் இயங்கக்கூடிய பெரும்பாலான விமானங்கள் எமெர்ஜென்சி இருக்கைகளுக்கு கொஞ்சம் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கின்றன.
பயண வழித்தடம், விமான நிறுவனங்களுக்கு ஏற்ப இது மாறுபடும். இந்த இருக்கையில் அனைத்து பயணிகளுக்கும் அமர வசதி கிடையாது. 15 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள், குழந்தைகளுடன் பயணிப்பவர்கள், முதியவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள், மீட்பு பணிகளின் போது உதவ முடியாதவர்கள் இந்த இருக்கையில் பயணிக்க முடியாது.





Click it and Unblock the Notifications
