பானுமதி அம்மாவை பார்க்க ஆசை...சரவணபவன் ராஜகோபால் வழக்கில் நீதி...ஜீவஜோதி உருக்கம்!!
சென்னை: ''பிரின்ஸ் சாந்தகுமார் வழக்கில் நீதி பெற்றுத் தந்த ஓய்வு பெற்ற நீதிபதி பானுமதி அம்மாவைப் பார்க்க ஆசையாக இருக்கிறது. அவர் கொடுத்த தீர்ப்பினால்தான் இன்று நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். தீர்ப்பு வந்து இருக்காவிட்டால், வாழ்நாள் முழுவதும் வலியுடன் இருந்து இருப்பேன்'' என்று ஜீவஜோதி தெரிவித்துள்ளார்.
பிரின்ஸ் சாந்தகுமார் வழக்கில் மறைந்த சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபப்ட்டது. இதை எதிர்த்து ஜீவஜோதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்தார். இந்த மேல்முறையீட்டில் 10 ஆண்டு சிறை தண்டனை சிறை தண்டனையை மரண தண்டனையாக மாற்றி உத்தரவு பிறப்பித்தவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் நேற்று ஓய்வு பெற்ற நீதிபதி பானுமதி.

நம்பிக்கையுடன் வாழ்கிறேன்:
இதையடுத்து புதிய தலைமுறை டிவி சேனல் இவரை தொடர்பு கொண்டு பேசியபோது, ''பானுமதி அம்மா அவர்கள் நீதியை நிலை நாட்டினார். அந்த தீர்ப்பு மட்டும் வந்து இருக்காவிட்டால், வாழ்நாள் முழுவதும் வலியுடன் இருந்து இருப்பேன். தற்போது சட்டத்தின் முன்பு நம்பிக்கையுடன் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சரவணபவன் உரிமையாளர் செல்வாக்கு மிகுந்தவர். பணம் பலம் பெற்றவர். அவருக்கு எதிராக அஞ்சாமல் நல்ல தீர்ப்பு பானுமதி அம்மா வழங்கி இருந்தார்கள்.

நம்பிக்கையுடன் வாழ்கிறேன்
இதையடுத்து புதிய தலைமுறை டிவி சேனல் இவரை தொடர்பு கொண்டு பேசியபோது, ''பானுமதி அம்மா அவர்கள் நீதியை நிலை நாட்டினார். அந்த தீர்ப்பு மட்டும் வந்து இருக்காவிட்டால், வாழ்நாள் முழுவதும் வலியுடன் இருந்து இருப்பேன். தற்போது சட்டத்தின் முன்பு நம்பிக்கையுடன் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சரவணபவன் உரிமையாளர் செல்வாக்கு மிகுந்தவர். பணம் பலம் பெற்றவர். அவருக்கு எதிராக அஞ்சாமல் நல்ல தீர்ப்பு பானுமதி அம்மா வழங்கி இருந்தார்கள்.

நீதி மட்டுமே எதிர்பார்த்தேன்
இந்த வழக்கில் சாந்தகுமார் கொலையில் நீதியை மட்டுமே எதிர்பார்த்தேன். சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழக்கி, ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று பூந்தமல்லி செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தது. ஆனால், நான் நீதி மட்டுமே எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தேன். நஷ்ட ஈட்டை இதுவரை வாங்கிக் கொள்ளவில்லை. வாங்குவது குறித்து யோசிக்கவும் இல்லை. காவல்துறையினர் கூட அந்தப் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறினர்.

அவரை சந்திக்க ஆசை
தமிழகத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு சென்ற முதல் பெண் நீதிபதியாக பணியாற்றியவர். அவரை பார்த்தது இல்லை. அவரைப் பார்க்க ஆசையாக இருக்கிறது. தமிழகம் வந்தால் அவரை சந்தித்து நன்றி சொல்ல வேண்டும்.

பொறுப்பு கொடுத்தால் ஏற்பேன்
தஞ்சாவூரில் அண்ணன் கருப்பு முருகானந்தத்தின் கீழ் கட்சியின் பணிகளை கவனித்து வருகிறேன். இதுவரை எனக்கு பாஜகவில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. கொடுத்தால் முழுமனதுடன் ஏற்றுக் கொண்டு செயல்படுவேன். திருச்சியில் பைபாஸ் சாலையில் எனது அப்பா பெயரில் ஒரு ஓட்டலும், தஞ்சாவூரில் பெண்கள் அழகு நிலையமும் நடத்தி வருகிறேன்.

சட்டமன்றத் தேர்தலில் பாஜக
பெண்களுக்கு பிரதமர் மோடியில் கொள்கைகள் பிடித்து விட்டன. படித்தவர்கள் அவரை ஏற்றுக் கொண்டனர். விரைவில் கிராம மக்களும் அவரை ஏற்றுக் கொள்வார்கள். வேறு எந்த அரசும் கொண்டு வராத வகையில் நாடு முழுவதும் கழிப்பறைகளை அமைத்து மோடி அரசு சாதனை புரிந்துள்ளது. தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்'' என்று தெரிவித்துள்ளார்.

ராஜகோபால் மீது என்ன வழக்கு
சரவண பவன் ஹோட்டலில் 1990ஆம் ஆண்டு கால கட்டங்களில் மேலாளராக பணியாற்றியவர் ராமசாமி. அவரது மகள் ஜீவஜோதியை ஜோசியர் கூறியதற்காக மூன்றாவதாக திருமணம் செய்ய முயற்சித்தார் மறைந்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால். ஆனால், ஜீவஜோதியோ தனது காதலர் பிரின்ஸ் சாந்தகுமாரை மணந்துகொண்டார். இதையடுத்து பிரின்ஸ் சாந்தகுமார் கொடைக்கானலில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். அதற்கு காரணம் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் தான் எனக் கூறி ஜீவஜோதி 20 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டார்.

சரவணபவன் ராஜகோபால் மரணம்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கடந்தாண்டு மார்ச் 9ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வேனில் படுத்த நிலையில் ராஜகோபால் சரணடைந்தார். இதையடுத்து அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வடபழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ராஜகோபால் சேர்க்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ராஜகோபாலின் உடல் அவரது சொந்த ஊரான புன்னைநகரில் அடக்கம் செய்யப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications