மாநாடு போன மனைவியை காணோமா? ஜெயக்குமாரை கேளுங்க! உதயநிதி சுளீர்! நாறடிச்சிடுவோம்- ஜெயக்குமார் சீற்றம்
சென்னை: அதிமுக மாநாட்டில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக கட்சி உருவாக்கப்பட்டு 51 ஆண்டுகள் நடந்து முடிந்துவிட்டன. திமுகவிற்கு இணையான கட்சி என்றாலும் மாநாடுகளை நடத்துவதில் எப்போதுமே அதிமுக இரண்டாம் இடம்தான். திமுக அளவிற்கு அதிமுக பிரம்மாண்ட மாநாடுகளை நடத்தியது இல்லை. அதிமுக நடத்திய மாநாடுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதிலும் அதிமுகவின் மாநாடுகள் கடந்த 10 வருடங்களாக நடக்கவே இல்லை. இந்த நிலையில் அதிமுகவை கைப்பற்றியதும் மதுரையில் எடப்பாடி பழனிசாமி மாநாட்டை நடத்தி காட்டி இருக்கிறார்.

மதுரையில் அதிமுகவின் எழுச்சி மாநாடு கடந்த 2 வாரம் முன் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் நடந்த மிகப்பெரிய மாநாடு ஆகும் இது. ஆனால் இந்த மாநாடு பல்வேறு காரணங்களுக்காக சர்ச்சையில் சிக்கியது.
பல்வேறு சர்ச்சைகள்: அதிமுக கூட்டத்தில் நடந்த பல்வேறு களேபரங்கள் விவாதங்கள் ஆகி உள்ளன. இந்த மாநாட்டில் தலைவர்கள் மேடையில் இருக்கும் நேரத்தில் பாடல் பாடிய ஒருவர் கனிமொழியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினர். கனிமொழியை மிக கடுமையான வார்த்தைகளில் , அச்சில் ஏற்ற முடியாத வகையில் கடுமையாக பேசினார்.ஆனால் அதிமுகவினர் இந்த ஆபாசமான வார்த்தைகளை கேட்டு, எதுவும் சொல்லாமல், அவரின் பாடலை ரசித்தனர். இந்த வீடியோ வெளியாகி தற்போது இணையத்தை உலுக்கி உள்ளது. எடப்பாடி இதை பற்றி வாய் திறக்காதது கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் இந்த அதிமுக மாநாட்டில் 8 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் கூட்ட நெரிசல், மது, விபத்து என்று பல்வேறு காரணங்களால் பலியாகி உள்ளனர். ஆனால் இந்த செய்தி வெளியே வராமல் விழா கமிட்டியினர் முடிந்த அளவு அதை மறைத்து உள்ளனர். இதுவும் சர்ச்சையானது.
அதேபோல் கூட்டத்திற்காக புளி சாதம் தயாரிக்கப்பட்டதால் உணவு வீணாய் போனது. 1 லட்சம் பேர் மட்டுமே கூட்டத்திற்கு வந்ததால் நேற்று 2 லட்சம் பேருக்கான உணவு தரையில் கொட்டப்பட்டது. இந்த சம்பவம் இணையத்தை உலுக்கி உள்ளது. இந்த பல்வேறு விஷயங்களால் தற்போது மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட அதிமுக மாநாடு தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கிறது.
மனைவி காணவில்லை: இந்த நிலையில்தான் அதிமுக மாநாட்டிற்கு அழைத்து சென்ற மனைவியை காணவில்லை என அதிமுக நிர்வாகி ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதை போலீசார் வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதை விமர்சித்து பேசுகையில், ஒரு மாநாடு எப்படி நடக்க கூடாதே அதற்கு உதாரணமாக அந்த மாநாடு நடந்தது. கேலிக்கூத்து மாநாடாக அந்த மாநாட்டை நடத்தினார்கள். மாநாட்டில் ஏதாவது கருத்துக்கள் சொல்லப்பட்டதா? அந்த கட்சியின் வரலாறு சொல்லப்பட்டதா?.. அந்த இயக்கத்தின் கொள்கைகள் சொல்லப்பட்டதா?.. வெறும் கலை நிகழ்ச்சிகள்தான் நடந்தது.
2 நாட்களுக்கு முன்பு அதிமுக நிர்வாகி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், மாநாட்டுக்கு அழைத்து சென்ற என் மனைவியை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசாரும் விசாரித்து வருகின்றனர். முதலில் யாரை விசாரிக்க வேண்டும்.. ஜெயக்குமார் அவர்களை தான் முதலில் விசாரிக்க வேண்டும்.. ஏன் என்றால்..மாநாட்டின் பொறுப்பாளர் அவர் தான்.. என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் வைத்து இருந்தார்.
ஜெயக்குமார் பதிலடி: இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பதிலில், திமுக ஆட்சி மீது மக்களுக்கு கடும் அதிர்ச்சி உள்ளது. ஆட்சி மீதான விமர்சனம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிமுக மாநாட்டின் வெற்றியை பொறுக்க முடியாதவர்கள் இப்படி பேசுகிறார்கள்.
அதிமுகவின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாதவர்கள் தற்போது வாந்தி எடுக்கிறார்கள். நாங்கள் 2 லட்சம் பேரை கூட்டி மாநாட்டை நடத்தினோம். இதெல்லாம் அவர்கள் செய்ய முடியாது. நேற்று வந்த கத்துக்குட்டி உதயநிதி. அவரால் என்ன செய்ய முடியும்? அதிமுகவை ஒழித்துவிட முடியுமா? அவர் இப்படி எல்லாம் பேச கூடாது. தொடர்ந்து பேசினால்.. சமூக வலைத்தளங்களில் அவரின் வண்டவாளத்தை நாற அடித்து விடுவோம்.
உன் அப்பன்.. அப்பனின் அப்பனாலேயே அதிமுகவை எதுவும் செய்ய முடியவில்லை. எங்களை பற்றி பேச நீயார் .. உன்னுடைய அப்பா மற்றும் உன்னுடைய லீலைகளை பற்றி நான் பேசட்டுமா? நான் பேசினால் 4 பக்கம் பேசி வண்டியில் ஏற்றலாம். செய்யட்டுமா? நீ உத்தமன் போல பேசலாமா? சொல்.. உன்னை பற்றி பேசி சோஷியல் மீடியாவில் நாறடித்துவிடோவோம் ஜாக்கிரதை என்று ஜெயக்குமார் கூறி உள்ளார்.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications