சரியில்லையே.. சவுக்கு சங்கர் மீது என்கவுன்ட்டரா? நிஜ விபத்தா? திமுக மீது குண்டை எறிந்த இந்து முன்னணி
சென்னை: கைதாகியிருக்கும் சவுக்கு சங்கர் விஷயத்தில், தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக தலையிட்டு விசாரிக்க வேண்டும் என்று இந்து முன்னணி முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது.
பெண் போலீசார் பற்றி தரக்குறைவாக, அவதுாறாக பேட்டி அளித்ததால், யூ-டியூபர் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த, ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டுக்கு எதிராக, கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.. எனவே, தேனியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்து, கோவை மத்திய சிறையிலும் அடைத்தனர்.

துன்புறுத்தல்: ஆனால், சிறையில் சவுக்கு சங்கரை துன்புறுத்துவதாகவும், உரிய சிகிச்சை வழங்கவும் கோரியும், ஹைகோர்ட்டில் அவரது அம்மா கமலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்... இந்த வழக்கில, 2 வாரங்களில் சிறைத்துறை பரிசீலித்து ஆணை பிறப்பிக்க நீதிபதிகள் நேற்றைய தினம் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், சவுக்கு சங்கர் விஷயத்தில், தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக தலையிட்டு விசாரிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கருத்துரிமையை திமுக அரசு நசுக்கி வருவதாகவும், அதற்கு காவல்துறை துணை போவதாகவும் இந்து முன்னணி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
புகார்கள்: இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "கடந்த, மூன்றாண்டு திமுக ஆட்சியில் ஆளும் கட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததாக,திமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் ஏராளமானவர்களை கைது செய்தும், வழக்கு பதிவு செய்தும் உள்ளது, தமிழக காவல்துறை. சிலரை வெளிமாநிலங்களுக்கு சென்று கூட, பயங்கரவாதிகளை போல கைது செய்து வந்தது.
இதுபோன்ற வழக்குகளுக்கு கைது தேவையற்ற நடவடிக்கை என, சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்தது. சமீபத்தில் பிரபல 'யுடியூபர்' சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அவர் தொடர்ச்சியாக, தி.மு.க., அரசின் ஊழல்களையும், நிர்வாக சீர்கேட்டையும் விமர்சித்து வந்தார்.
ஆட்சேபம்: காவல்துறையில் உள்ள சில அதிகாரிகள் பற்றி ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவித்ததாகவும், அந்த வகையில் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை கூறியுள்ளது. சவுக்கு சங்கர் அவதூறான கருத்துக்களை பொதுவெளியில் பேசியிருந்தால், அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதில், யாருக்கும் எவ்வித ஆட்சேபனையும் இருக்க போவதில்லை.
ஆனால், தி.மு.க., அரசு அவரை கைது செய்த விதமும் கொண்டு சென்றபோது, நடந்த விபத்தும், புது வகையான, என்கவுன்டர் நிகழ்வா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அரசும், காவல்துறையும் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம்.
குரல்வளை: எனவே, தி.மு.க., அரசின் குறைகளை விமர்சிப்பவர்களை கைது செய்து சிறையில் அடைத்து, எதிரான விமர்சன குரல்வளையை நசுக்கும் அராஜக போக்கை தொடர்ந்து தி.மு.க., அரசு செய்து வருகிறது. ஊழல் வழக்கில் கைதான தி.மு.க., அமைச்சர்களுக்காக ஓடோடி வந்த மாநில மனித உரிமை ஆணைய தலைவர் இவ்விவகாரத்தில் மவுனம் சாதிப்பது தி.மு.க., அரசின் துஷ்பிரயோகம்.
எனவே, சவுக்கு சங்கர் விஷயத்தில், தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக தலையிட்டு விசாரிக்க வேண்டும். தி.மு.க., அரசின் தொடர்ச்சியான மக்கள் விரோத, ஜனநாயக விரோத செயல்பாடுகளை மக்கள் திரண்டு, ஜனநாயக ரீதியாக போராட்டத்தை முன்னெடுத்து தக்க பாடம் கற்பிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். திமுக அரசு மீது இந்து முன்னணி முன்வைத்திருக்கும் இந்த குற்றச்சாட்டுகள் மிகுந்த பரபரப்பை தந்துவருகிறது.












Click it and Unblock the Notifications