Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மெரினா கடற்கரையில் ஏழு இடங்களில் நீர் சுழற்சி.. மறந்தும் குளிக்க வேண்டாம்..போலீசார் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினா கடலில் குளிக்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போலீசார் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். சென்னை மெரினா கடலை பொறுத்தவரை குளிப்பதற்கு உகந்த இடம் கிடையாது. அங்கு கடல் நீருக்கு அடியில் சுழற்சி இருக்கிறது. இதனால் பலர் மெரினா கடலில் குளிக்க சென்று மயமாகி உள்ளனர். அந்த வகையில் மெரினாவில் 7 இடங்களில் சுழல் இருப்பதாகவும்.. குளிக்க வேண்டாம் என்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்தியாவின் மிக நீளமான கடற்கரையாகவும் (பீச்) உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாகவும் சென்னை மெரினா கடற்கரை அமைந்துள்ளது. ஜார்ஜ் கோட்டையில் தொடங்கி, பெசன்ட் நகர் வரை 13 கிமீ தூரத்திற்கு நீளமான கடற்கரையாக உள்ளது. சென்னை மெரினா கடற்கரை முழுமையாக மணற்பாங்காக காணப்படும். இதனால் பலர் இங்கு வந்து செல்கிறார்கள். இக்கடற்கரையை ஒட்டி புகழ் பெற்ற தலைவர்களின் நினைவிடங்கள், உருவச்சிலைகள், சமாதிகள் அமைந்துள்ளது. மெரினா கடற்கரையை பொறுத்தவரை சென்னை நகரின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.

marina beach

மெரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் மெரினா கடற்கரை என்பது குளிப்பதற்கு உகந்த பகுதி கிடையாது. கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படும். ஆங்காங்கே சுழல்களும் காணப்படும். இந்தசூழல்களில் சிக்கி
சென்னை மெரினா கடலில் குளிக்கும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி உயிரை இழக்கும் சம்பவங்கள் நடக்கிறது. இதனால் மெரினா கடலில் குளிப்பதை தடுக்க போலீசார் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் பலன் கிடைப்பது இல்லை.

இந்தநிலையில் சென்னை மாநகர போலீசார் சில நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். சென்னை நேப்பியர் பாலம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள மெரினா கடல் பகுதியில் 7 இடங்களில் கடல் நீருக்குள் சுழற்சி இருப்பதாகவும் அந்த பகுதியில் கடலில் குளிப்பவர்கள் சுழற்சியில் சிக்கி அலையால் இழுத்து செல்லப்பட்டு உயிரை விடுகிறார்கள். எனவே அந்த பகுதியில் கடலில் குளிப்பதை தடுக்கும் விதமாக பாதுகாப்பு அரண்களை அமைத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்திலும் ஈடுப்பட்டிருக்கிறார்கள். இந்த புதிய முயற்சிக்கு பலன் கிடைக்கும் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+