சம்ப்பில் தண்ணி வரலை.. தட்டிக் கேட்ட கணவன் மனைவிக்கு கத்திக் குத்து.. சென்னையில் ஷாக்!
குடிநீர் பிரச்சனையால் தம்பதியை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
சென்னை: அடக்கொடுமையே... தண்ணி பிரச்சனை கடைசியில் கத்தி குத்து வரை வந்துவிட்டதே.. சம்ப்பில் தண்ணி இல்லை என்று புருஷன்-பொண்டாட்டி இருவரையும் பக்கத்து வீட்டுக்காரர் எட்டி உதைத்ததுடன், வாய்-தாடைகளிலும் அடித்துள்ளார்!
குடிநீருக்காக போராட்டம், மறியல் நடப்பது வழக்கம். இல்லையென்றால், குழாயில் தண்ணீர் பிடிக்க சண்டை வரும்.. ஆனால் சம்ப்பில் தண்ணி இல்லை என்பதற்காக தகராறு வருமா?
சென்னையில் மிக மோசமான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. அதிலும் புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் இந்த கொடுமை அதிகரித்து வருகின்றது.

அடுக்குமாடி குடியிருப்பு
பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், அமரேசன் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இப்போது தண்ணீர் பஞ்சம் என்பதால், இந்த காலனியில் உள்ளவர்கள் எல்லாரும் காசு போட்டுதான் தண்ணீரை விலைக்கு வாங்கி வருகிறார்கள்.

மோட்டார்
இந்நிலையில் இங்கு குடியிருக்கும் மோகன் என்பவரின் வீட்டில் தண்ணி வரவில்லை. அதனால் மோட்டர் போட்டார். இதை பக்கத்து வீட்டுக்காரர் ஆதிமூலராமகிருஷ்ணன் பார்த்துவிட்டார். இவர் தமிழக சபாநாயகரின் ஓட்டுநர் என்று கூறப்படுகிறது. "சம்ப்பில் தான் தண்ணி இல்லையே.. எதுக்காக மோட்டர் போட்டே" என்று கேட்டுக் கொண்டே மோகனை எட்டி உதைத்துள்ளார் ஆதிமூலராமகிருஷ்ணன்.

சுபாஷினி
இதை பார்த்த மோகனின் மனைவி பதறியடித்து கொண்டு ஓடிவந்தார். எதுக்காக என் புருஷனை எட்டிஉதைத்தாய்? என்று கேட்டுள்ளார். உடனே ஆதிமூலராமகிருஷ்ணன் கத்தியை எடுத்து கொண்டு வந்து, சுபாஷினியின் வாய்தாடையில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்தம் சொட்ட சொட்ட கீழேவிழுந்தார் சுபாஷினி. உடனடியாக பக்கத்தில் இருந்த ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று, 6 தையல் போட்டார்கள்,

கைது
இந்த சம்பவம் குறித்து மோகன் சங்கர் நகர் போலீசில் புகார் தரவும், போலீசார் விரைந்து வந்து ஆதிமூலராமகிருஷ்ணனை கைது செய்து கூட்டிச்சென்றார்கள். நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்துக்கே, ஒரு தீர்வும் இன்னும் எட்டப்படாத நிலையில், இந்த பஞ்சத்தை வைத்து வரும் பஞ்சாயத்துகளுக்கு என்னதான் தீர்வோ!
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம்












Click it and Unblock the Notifications