பாகிஸ்தானை ஐசியூவில்தான் சேர்க்கணும்.. இந்தியா அடித்த ஒரே அடி.. வசமாக வறுமையில் மூழ்கும் நாடு!
டெல்லி: பாகிஸ்தானின் சிந்து நதிப்படுகையில் நீர் இருப்பு நிலைமை மிக மோசமான நிலையில் உள்ளது. இந்த நதியை நம்பி இருக்கும் கிராமங்கள் வறுமையில் மூழ்கும் சூழல் உள்ளது. முக்கிய அணைகளில் இருந்து வெளியேறும் நீரின் அளவு, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 15% குறைந்துள்ளது. இந்த குறைவு, பருவ சாகுபடிக்கு முன்னதாக விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. பாகிஸ்தானின் நதி நீர் நிலைமை ஐசியூவிற்கு போகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
குறைந்த தண்ணீர் அளவு
1960 ஆம் ஆண்டின் சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக கைவிடப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளில் கிடைக்கும் நீரைப் பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும் இது. உலக வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தம், இந்தியாவில் அமைந்துள்ள பியாஸ், ரவி மற்றும் சட்லெஜ் ஆகிய மூன்று கிழக்கு நதிகளின் நீரின் மீதான கட்டுப்பாட்டை இந்தியாவிற்கு வழங்கியது. அதே சமயம் மூன்று மேற்கு நதிகளான சிந்து, செனாப் மற்றும் ஜீலம் ஆகியவற்றின் நீர் மீதான கட்டுப்பாட்டை பாகிஸ்தானுக்கு வழங்கியது. இந்தியாவில் அமைந்துள்ள சிந்து நதியின் மொத்த நீரில் இதன் மூலம் சுமார் 30% இந்தியாவுக்கு கிடைத்தது, மீதமுள்ள 70% பாகிஸ்தானுக்கு கிடைத்தது. இதைத்தான் இந்தியா தடுத்துள்ளது. இந்த நதிகளின் நீர் இனி பாகிஸ்தானுக்கு கிடைப்பது கடினம்.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்ட நிலையில் பாகிஸ்தானில் உள்ள செனாப் வற்றி உள்ளது. மூன்று மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், மற்றும் செனாப் நதிகளில்.. செனாப் முற்றிலுமாக வற்றி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் எங்களுக்கு வழங்கும் தண்ணீரை நீங்கள் நிறுத்தினால், உங்கள் மூச்சை நாங்கள் நிறுத்துவோம் என்று பாகிஸ்தான் ராணுவத்தின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் டைரக்டர் ஜெனரல் (DG ISPR) எச்சரித்து உள்ளார்.
பஞ்சாபில் நீர்மட்டம் குறைவு
ஜூன் 5-ம் தேதி பஞ்சாபில் 1.24 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. கடந்த ஆண்டு இதே நாளில் வெளியேற்றப்பட்ட 1.44 லட்சம் கன அடியை விடக் குறைவு. தார்பேலா அணையின் நீர்மட்டம் 1,465 மீட்டராக இருந்தது, இது குறைந்தபட்ச அளவான 1,402 மீட்டருக்கு மேலாக உள்ளது. சாஷ்மா அணையின் நீர்மட்டம் 644 மீட்டராக இருந்தது, இது 638 மீட்டர் என்ற குறைந்தபட்ச அளவுக்கு சென்று உள்ளது.
செனாப் நதியின் மோசமான நிலை
மராலாவில் உள்ள செனாப் நதியின் நீர் வெளியேற்றம் மே 28-ல் 26,645 கன அடியாக இருந்தது. ஆனால் ஜூன் 5-ல் இது 3,064 கன அடியாகக் குறைந்தது. நீர்மட்டம் குறைவதால் அணைகளில் இருந்து நீரை வெளியேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது. இது பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
வெப்ப அலை எச்சரிக்கை
ஜூன் 8 முதல் பாகிஸ்தானில் கடுமையான வெப்ப அலை வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மற்றும் மேல் பஞ்சாப், இஸ்லாமாபாத் மற்றும் கைபர் பக்துன்வாவில் வெப்பநிலை இயல்பை விட 5 முதல் 7 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம். இந்த சூழ்நிலை விவசாய உற்பத்தியை மேலும் பாதிக்கக்கூடும்.
விவசாய சாகுபடி பருவம் நெருங்கி வரும் நிலையில் பாகிஸ்தானில் 21% நீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இது விவசாய உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
சிந்து நதி ஒப்பந்த விவகாரம்
இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தியதை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் பலமுறை கோரிக்கை வைத்துள்ளது. பாகிஸ்தானின் நீர் வளத்துறை செயலாளர் சையத் அலி முர்தாசா, இந்திய ஜல் சக்தி அமைச்சகத்திற்கு நான்கு முறை கடிதம் எழுதியுள்ளார். இந்தியா ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தத்தை நிறுத்த முடியாது என்றும், இது விதிகளை மீறுவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்தியா தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவும், பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிடும் வரை பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலைப்பாடு பாகிஸ்தானுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரெட் லைன்
பாகிஸ்தானின் ரெட் லைனை இந்தியா தாண்டிவிட்டதாக அந்நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் விடுத்த எச்சரிக்கையில் தண்ணீர் என்பது பாகிஸ்தானின் வாழ்வாதாரம். 240 மில்லியன் மக்களின் வாழ்வாதாரம் இது. அவர்களின் உயிர் சம்பந்தப்பட்டது. அதை பாகிஸ்தான் சாதாரணமாக எடுத்துக்கொள்வது. பாகிஸ்தானின் அஸ்திவாரம் அதை நம்பி இருக்கிறது.
பாகிஸ்தான் போட்ட சிவப்பு கோடுதான் தண்ணீர் என்பது. அந்த சிவப்பு கோட்டை இந்தியா தாண்டிவிட்டது. இந்திய மேலாதிக்கத்தை பாகிஸ்தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. தண்ணீர் என்பது பாகிஸ்தானின் சிவப்புக் கோடு, மேலும் 240 மில்லியன் பாகிஸ்தானியர்களின் இந்த அடிப்படை உரிமையில் எந்த சமரசத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இந்தியா தண்ணீரை ஆயுதம் போல பயன்படுத்துகிறது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேச விதிகளை, ஒப்பந்தங்களை மீறி செயல்படுகிறது. இந்தியா இந்த பிராந்தியத்தின் அமைதியை குலைக்கும் விதமாக செயல்படுகிறது என்று அந்நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications