ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர்.. கூட்டிக் கழிச்சு பார்த்தா இந்த தண்ணியும் நம்ம சென்னைக்கு பத்தாதாமே!
Recommended Video
சென்னை: ஜோலார்பேட்டையில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்தாலும் நம்ம சென்னையின் தாகத்தை தீர்க்க முடியாத அளவுக்கு வறட்சியின் பிடியில் தலைநகர் உள்ளதாக வேதனை தரும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக மழை இல்லாமல் வெயில் கொளுத்தியது. இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு வறட்சியும் நிலவி வந்தது.
சென்னைக்கு தண்ணீர் விநியோகம் செய்த ஏரிகள் அனைத்தும் வறண்டு விட்டதால் 40 சதவீதம் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. மக்கள் தினந்தோறும் தண்ணீருக்காக அல்லாடி வருகின்றனர். சென்னையில் தனியார் டேங்கர் லாரிகளும் தண்ணீர் கட்டணத்தை இரட்டிப்பு ஆக்கின.

துரிதம்
இதையடுத்து ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் மேட்டூர் அணை தண்ணீர் வரவழைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக ரூ 65 கோடி நிதியையும் ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

ரயில்வே துறை
முதல் 50 பெட்டிகளில் 2.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் நேற்று சென்னையை வந்தடைந்தது. இது போல் 4 நடை வீதம் ஒரு நாளைக்கு 10 மில்லியன் தண்ணீர் சென்னைக்கு வந்தடையும். இதற்காக அரசு ஒரு நாளைக்கு ரூ 32 லட்சத்தை ரயில்வே துறைக்கு செலுத்துகிறது.

குறைந்தபட்சம்
இந்த தண்ணீர் நிச்சயம் சென்னைக்கு மக்களுக்கு போதாது என்று மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு நாளைக்கு சென்னைக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் அரசு வரவழைப்பதோ 10 மில்லியன் லிட்டர். எனினும் வரும் நவம்பர் மாதம் வரை, அதாவது வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.

பூர்த்தி
சென்னை மக்களின் ஒரு நாளைக்கு தேவையான தண்ணீரை காட்டிலும் 2 சதவீதம் குறைந்த அளவிலான நீரே ரயில் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இது எப்படி சென்னையின் ஒட்டுமொத்த மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மக்கள் வேதனை
மேலும் சிறப்பு ரயில்களின் நீராதாரமான மேட்டூர் அணையிலும் சராசரி தண்ணீர் அளவை காட்டிலும் பாதி அளவே தண்ணீர் இருக்கிறது. இதனால் மக்களின் தண்ணீர் பஞ்சம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என தெரிகிறது. எனவே ரயில்மூலம் ஒரு நாளைக்கு குறைந்தது 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வந்தால்தான் ஓரளவுக்கு பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்பதே நிதர்சனம். கடந்த ஏப்ரல் மாதம் ஒரு டேங்கர் லாரி ரூ. 2000 கட்டணமாக பெற்ற நிலையில் தற்போது அந்த கட்டணம் 5000 ரூபாய் ஆகியுள்ளது என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications