அரசியலில் விஜய்! கார் ரேஸில் அஜித்! இனி நான்தான் ஸ்டார்! வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்
சென்னை: எனக்கு 2, 3 திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டதாக பலர் கூறி வருகிறார்கள். ஆனால் நான் இன்னும் சிங்கிளாகதான் இருக்கிறேன். எனக்கு நல்ல மனைவி அமைய வேண்டி சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் பிரார்த்தினை செய்தார்.
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் என்ன வேண்டினாலும் நடக்கும் என்பது ஐதீகம். அதனால்தான் இந்த கோயிலுக்கு வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தும் கூட பக்தர்கள் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு செல்கிறார்கள்.

அந்த வகையில் பிக்பாஸ் பிரபலம் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் இந்த கோயிலுக்கு வந்திருந்தார். அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், நான்தான் வாட்டர்மெலன் ஸ்டார் பிரபாகர். நான் பிசியோதெரபி டாக்டரும் கூட!
பிக்பாஸ் மூலம் உலக பிரபலமடைந்துவிட்டேன். இந்த கோயிலுக்கு நான் எதற்காக வந்தேன் என்றால், வடிவுடையம்மனிடம் ஒரு வேண்டுதல் வைத்துள்ளேன். எனக்கு மனைவியாக நல்ல பெண் கிடைக்க வேண்டும், அதன் மூலம் ஒரு அழகான பெண் குழந்தையும் பிறக்க வேண்டும் என பிரார்த்தனை செய்ய வந்துள்ளேன்.
முன்னணி இயக்குநர்களின் படத்தில் ஹீரோவாக நடிக்க ஆசை இருக்கிறது. எனவே எனக்கு நல்ல வாய்ப்புகளை அம்மன் பெற்றுத் தர வேண்டும். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். அஜித் கார் ரேஸுக்கு போய்ட்டார். சூர்யா பாம்பேக்கு போயிட்டாரு.
இவர்களுக்கு பதிலாக மக்கள் என்னை ஹீரோவாக ஏற்றுக் கொள்வார்கள். அதனால் எனக்கு நல்லதொரு வாய்ப்பை இந்த அம்மன் செய்து தர வேண்டும். எனக்கு 2, 3 திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டதாக பலர் அவதூறு பரப்புகிறார்கள். எனக்கு திருமணமே ஆகவில்லை, நான் சிங்கிள்தான், எனக்கு நல்ல பெண் அமைய வேண்டும். இவ்வாறு வேண்டிக் கொள்வதாக திவாகர் தெரிவித்தார்.
மேலும் இந்த கோயில் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். மதுரை மீனாட்சி கோயிலுக்குள் செல்லும் போதெல்லாம் எனக்கு ஒரு வைப்ரேஷன் ஏற்படும். அதை நான் இந்த கோயிலுக்குள் கால் எடுத்து வைத்த போது உணர்ந்தேன்.
இந்த ஆண்டு சிங்கிளாக வந்த நான், வடிவுடையம்மன் அருளால் அடுத்த முறை வரும் பரோது மனைவி, குழந்தையுடன் வர வேண்டும். நான் காமெடி ரோல்களில் மட்டுமே செட்டாவேன் என சொல்கிறார்கள். ஆனால் நான் ஆக்ஷன், லவ், ரொமான்ஸ் காட்சிகளிலும் நடித்து அசத்துவேன்.
சிவகார்த்திகேயகனுக்கு பிறகு குழந்தைகளை அதிகம் கவர்ந்தது எனது நடிப்புதான். எனவே நான் விரைவில் பெரிய ஹீரோவாக வேண்டும். பிக்பாஸ் போனதன் மூலம் நல்ல பெயர் பெற்றிருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
வாட்டர் மெலன் ஸ்டார், சின்ன சிவாஜி என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்டு ரீல்ஸ் போட்டு பிரபலமானவர் திவாகர். இவர் விளம்பரத்திற்காக செய்யும் சேட்டைகள் ஏராளம். சினிமாவில் பெரிய நடிகர்களை வம்புக்கு இழுக்கும் திவாகர், யூடியூபில் தனது நடிப்பை பார்த்து தான் அவர்கள் நடிக்கிறார்கள் என்றும் எல்லை மீறிப் பேசி வருகிறார். இவருக்கு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சூர்யாவே தன்னை பார்த்துதான் கஜினி படத்தில் தர்பூசணி பழத்தை சாப்பிட கற்றுக் கொண்டார் என்றெல்லாம் பேசி வந்தவர்தான் இந்த திவாகர். இவருடைய இன்ஸ்டாவில் கமென்ட்டில் பலரும் அசிங்கமாகவே திட்டினாலும் அதை பொருட்படுத்தாமல் தனது சேட்டைகளை தொடர்ந்து வருகிறார்.
-
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications