விஜயகாந்த் நடிப்பில் வரப்போகும் 2 படங்கள்.. AI மூலம் உயிர்ப்பிப்போம்.. இயக்குநரின் சூப்பர் அப்டேட்!
சென்னை: ஏற்கனவே விஜயகாந்த் நடித்து நின்று போன படத்தின் காட்சிகள் உள்ளதாகவும், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜயகாந்த் நடிப்பது போல இரண்டு படங்களை வெளியிட உள்ளதாகவும் இயக்குநர் ஆபாவாணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ஆபாவாணன், அரவிந்த்ராஜ், ரமேஷ், ஜெயம் ராஜா, நடிகர் ராஜேந்திர நாத், மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆபாவாணன், “சினிமா சரித்திரத்தில் பல முக்கிய மாற்றங்களை கொண்டு வந்தவரும், அரசியல் மாற்றங்களுக்கு அடித்தளம் போட்டவரும் கருணாநிதி. சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி ஆகிய மிகப்பெரிய 2 ஆளுமைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு உள்ளது. திரைத்துறையை உயர்த்தி காட்டியதில் அவரின் பங்கு என்பது மிகப்பெரிய சாதனையைக் கொண்டது.
அதனால் சென்னை தரமணி திரைப்பட கல்லூரி வளாகத்தில் கருணாநிதி மற்றும் விஜயகாந்த் ஆகிய இருவது சிலையையும் வைக்க வேண்டும். அதே போல் இங்கு இருக்கும் இரண்டு அரங்கிற்கு ஒன்றுக்கு மறைந்த முதல்வர் கருணாநிதி பெயரையும் மற்றொன்றுக்கு விஜயகாந்த் பெயரையும் வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
கருணாநிதியின் வசனங்கள் திராவிட ஆட்சி அமைய முக்கிய காரணமாக இருந்தது. எனவே அவரின் உழைப்பை நினைவுகூட வேண்டும். மனித நேயம் கொண்ட மனிதர் விஜயகாந்த் என்பதற்கு எடுத்துக்காட்டு அவரின் இறுதி ஊர்வலத்தில் சேர்ந்த கூட்டம் தான். தீவுத் திடலில் அரசு சிறப்பாக ஏற்பாடுகளை செய்து கொடுத்தது. அரசுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
திரைப்பட கல்லூரியைச் சேர்ந்த எங்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர் விஜயகாந்த். அவருக்கு கைம்மாறு செய்யும் வகையில் நாங்கள் ஒரு திட்டத்தை நிறைவேற்ற நினைக்கிறோம். விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போதே இது தொடர்பாக அவரிடம் பேசி ஒப்புதல் வாங்கிவிட்டோம். விஜயகாந்த் நடித்து நான் தயாரித்த 'ஊமை விழிகள்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. பல்வேறு முன்னோடியான முயற்சிகளை நாங்கள் முயன்றிருக்கிறோம்.
நடிகை அபிராமி உயிர் பிழைச்சதே பெரிசு.. விஜய் சேதுபதி செருப்பெல்லாம் பிஞ்சிருச்சு: மன்சூர் அலிகான்
முதல் முறையாக ஒரு படத்திற்கு முதல் பாகம், இரண்டாம் பாகம் எடுக்க நாங்கள் திட்டமிட்டோம். அப்படி நான், ராதாரவி இணைந்து விஜயகாந்தை வைத்து எடுக்க நினைத்த படம்தான் 'மூங்கில் கோட்டை’. அப்போது விஜயகாந்த் 'உழவன் மகன்’ படத்தை தொடங்கியதால், இந்தப் படம் பாதியில் நின்றுபோனது.
இந்தப் படத்திற்காக விஜயகாந்த் நடித்த சுமார் 70 ஆயிரம் ஃபூட்டேஜ்கள் எங்களிடம் உள்ளன. எங்களிடம் இருக்கும் அந்தக் காட்சிகளை வைத்து தற்போது இருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி அடுத்த இரண்டு படங்களில் நடிகர் விஜயகாந்த்தை உயிருடன் திரையில் நடமாட விடுவோம். அதன் மூலம் எதிர்கால சந்ததிக்கு விஜயகாந்த் யார் என்று தெரியும்” எனத் தெரிவித்தார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications