”சிஎம் சார்..” எதற்கும் தயார் என சொன்ன தவெக விஜய்.. பரந்தூர் மக்கள் எடுத்த அதிரடி முடிவு!
சென்னை: பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள நில உரிமையாளர்கள் 19 பேர் நிலத்தை எழுதி கொடுத்ததாக அறிவிப்பு வெளியான நிலையில், விஜய் போராட்டத்திற்கு அழைத்தால் நாங்கள் வரத் தயார் என்று எதிர்ப்புக்குழு தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் நிலங்களை வழங்க முன்வருவதாக திட்டுமிட்டு நாடகத்தை அரங்கேற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாகவே இதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், பரந்தூரில் உள்ள விவசாய மக்கள் நிலங்களை வழங்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள். நீண்ட நாட்களாக போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார்.

இதேபோன்று, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். பரந்தூர் மக்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறியிருந்தார். மேலும் தயவு செய்து சிஎம் சார் பரந்தூர் மக்களை நேரில் சென்று பார்த்து பேச வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இதை எல்லாம் செய்யாமல், எல்லாத்தையும் கடந்து போயிடலாம் என்று நினைத்தால், பரந்தூர் மக்களுடன், விவசாயிகளையும் நானே அழைத்து வந்து சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட நேரிடும் என்றும் விஜய் எச்சரித்து இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. நிலம் கையகப்படுத்த பரந்தூர் விவசாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் சூழலில் நேற்று 19 பட்டாதாரர்கள் 9 கோடியே 2 லட்சம் மதிப்பு கொண்ட 17.5 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு தொழிற் வளர்ச்சி நிறுவனத்துக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக நேற்று அறிவிப்பு வெளியாகின.
நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்தவர்கள் 19 பேருக்கும் நிலத்திற்கான இழப்பீட்டு தொகை வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பரந்தூரில் நிலம் வாங்கிய வெளியூர் வியாபாரிகளை அழைத்து வந்து பத்திரப்பதிவு செய்வதாகவும், போராடும் விவசாயிகளை பலவீனப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக்குழு தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், விஜய் போராட்டத்திற்கு அழைத்தால் நாங்கள் வரத் தயார் என்றும், விவசாயிகள் நிலங்களை வழங்க முன்வருவதாக திட்டுமிட்டு நாடகங்கள் அரங்கேற்றப் படுவதாகவும் எதிர்ப்புக்குழு தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுப்பிரமணியன் கூறியதாவது:- விவசாயிகள் நிலங்களை வழங்க விவசாயிகள் முன்வருவதாக திட்டுமிட்டு நாடகங்கள் அரங்கேற்றப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசிய போது அனைத்தையும் நான் விளக்கியிருந்தேன்.. அதற்கு பிறகும் பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் நடப்பவை அனைத்தையும் தொடர்ந்து தெரியப்படுத்தி வருகிறேன். இந்த வார இறுதியில் மிகப்பெரிய போராட்டம் இருக்கும். விஜய் அழைத்தால் ஒட்டுமொத்த பரந்தூர் மக்களும் அணிவகுத்து வர தயார். இந்த சூழல் நிச்சயம் உருவாகும்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications