Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாங்கதான் ராஜா.. அண்ணாமலைக்கு எடப்பாடி அப்படி ‘ரியாக்ட்’ செய்தது ஏன்? போட்டு உடைக்கும் கோவை சத்யன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக - பாஜக இடையே கூட்டணி தொடர்பாக மோதல்கள் நிகழ்ந்து வரும் நிலையில், "தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி கைகாட்டினால் தான் அரசியல் மாற்றம் நடக்கும். இங்கு அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். இந்த இடத்துக்கு நாங்கள் தான் ராஜா." எனக் கூறியுள்ளார் அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - அதிமுகவினர் இடையே தொடர்ச்சியாக கருத்து மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை சீண்டும் வகையில் பேசுவதும், அதற்கு அதிமுகவினர் பதிலடி கொடுப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. அண்மையில் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலையை முதிர்ச்சியற்ற தலைவர் என விமர்சித்தார்.

பாஜக - அதிமுக கூட்டணி இணக்கமாக இருக்கிறது என்று அதிமுகவினர் கூறி வந்தாலும், அண்ணாமலை உடன் மோதல் போக்கை கடைபிடித்தே வருகின்றனர். நாங்கள் டெல்லி தலைமையுடன் கூட்டணி பேசுவோம், கூட்டணியை முடிவு செய்ய அண்னாமலை யார் என அதிமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால், தேர்தலின்போது அதிமுக - பாஜக கூட்டணி இடையே கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 We are the king here: Kovai sathyan about aiadmk bjp alliance : exclusive interview

அதிமுக - பாஜக கூட்டணி : அண்மையில், திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, தமிழ்நாட்டை ஆண்ட அனைத்து கட்சிகளின் சொத்து பட்டியலையும் வெளியிடுவேன் என்றார். இது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுக ஐடி விங் நிர்வாகியும், செய்தி தொடர்பாளருமான கோவை சத்யன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

கோவை சத்யன் பேசுகையில், "அண்ணாமலை அரசியல் களத்துக்கு வந்து 2 ஆண்டுகள் தான் ஆகின்றன. அவரது அரசியல் ஸ்டைல் வித்தியாசமானது. அவர் அரசியல் அனுபவம், அரசியல் நாகரீகத்தைக் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய காலம் இருக்கிறது. தேசப்பற்று, ஊழல் ஒழிப்பு, மனிதாபிமானம் என்பதெல்லாம் ஒரு கட்சிக்கு மட்டும் உரியது அல்ல. எல்லா கட்சிகளிலும் தேசப்பற்று கொண்டவர்கள் இருக்கிறார்கள், ஊழல் கறை படியாத கரங்களைக் கொண்டவர்கள் இருக்கிறார்கள்.

 We are the king here: Kovai sathyan about aiadmk bjp alliance : exclusive interview

ராஜா நாங்க தான் : தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி கைகாட்டினால் தான் அரசியல் மாற்றம் நடக்கும். அதுதான் கள யதார்த்தம். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். இந்த இடத்துக்கு நாங்கள் தான் ராஜா. யார் என்ன சொன்னாலும், எந்த நேரத்தில் எப்படி ரியாக்‌ஷன் கொடுக்க வேண்டுமோ அதைத்தான் எடப்பாடியார் செய்வார்.

விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் தங்கள் அடையாளத்தை தொலைத்துவிட்டு திமுக கூட்டணியில் இருக்கின்றன. வேங்கைவயல் விவகாரத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க விசிகவால் முடியவில்லை. இடதுசாரிக் கட்சிகள் அடையாளம் துறந்து தொங்கு சதைகளாகவே கூட்டணி கட்சிகள் இருக்கின்றன. தவாக வேல்முருகன் சபாநாயகர் பற்றி எப்படி பேசினார்? இப்போதைக்கு வேறு வழியில்லை, அடையாளத்தை தொலைத்ததை உணரும்போது விலகி வருவார்கள்.

வலுவான கூட்டணி : அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை எந்தக் கூட்டணி கட்சியாக இருந்தாலும் சமநிலையோடுதான் நடத்துவோம். அது கூட்டணியில் பயணிக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் தெரியும். கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் தேவை என்னவாக இருக்கும்? அதை எப்படி சமாளிப்பது என்பது எடப்பாடியாருக்கு தெரியும். தேர்தல் நேரத்தில், கூட்டணி உறுதியான பிறகுதான் வலுவான கூட்டணி - வலுவற்ற கூட்டணி என்ற பேச்சுகள் வரும். இப்போதைக்கு அதுபற்றி சொல்ல முடியாது, ஒரே நாளில் என்ன வேண்டுமானாலும் மாறலாம்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+