இந்தியா-பாகிஸ்தான் போர்: எங்களுக்கு எந்த தொடர்பும் இல்ல! எதுவும் பண்ண முடியாது! கைவிரித்த அமெரிக்கா?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இந்தியா-பாகிஸ்தான் மோதலில் அடிப்படையில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

இந்த மோதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அமெரிக்காவின் திறனுக்கும் அவர்களின் 2 நாடுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை ஏற்கனவே 40 வருடங்களுக்கு மேல் அவர்கள் மோதி வருகின்றனர். நாங்கள் என்ன செய்ய முடியும்.

இந்தியா பாகிஸ்தான் மோதல் தற்போது விரிவாகி உள்ளது, இந்த நாடுகளை நாம் கட்டுப்படுத்த முடியாது. அடிப்படையில், இந்தியா பாகிஸ்தானுடன் விரோதங்களைக் கொண்டுள்ளது, மேலும் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாம் செய்யக்கூடியது என்னவென்றால், இரண்டு நாடுகளையும் சிறிது சிறிதாக பதட்டத்தைக் குறைக்க வலியுறுத்துவதுதான், ஆனால் அடிப்படையில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு விஷயத்தில் தலையிட நாங்கள் விரும்பவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உடன் ஆலோசனை

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவசர அவசரமாக பேசினார். பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலுக்கு இடையே இந்த ஆலோசனை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் அமைச்சர் ஜெய்சங்கர் அவசரமாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிற்கு போன் அடித்துள்ளார். பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல் குறித்தும், இந்தியா தரக்கூடிய பதிலடி குறித்தும், இதனால் உருவாக உள்ள போர் வாய்ப்புகள் குறித்தும் இவர்கள் ஆலோசனைகளை மேற்கொண்டு உள்ளனர்.

We can not control India and Pakistan we have no connection with them says US Vice President

இத்தாலி நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியாவின் நிலைப்பாடு, பாகிஸ்தான் மேற்கொண்ட அத்துமீறல்கள் குறித்தும் விளக்கினார். இது போக ஈரான், ஆஸ்திரேலியா, பிரிக்ஸ் நாடுகள் உள்ளிட்ட சில நாட்டு அதிகாரிகள் உடனும் இந்திய வெளியுறவுத்துறை சார்பாக அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர்.

இரண்டு நாட்டு மோதல்

வியாழன் இரவு மற்றும் வெள்ளி அதிகாலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. முன்னதாக ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் பாகிஸ்தானில் இருந்து வந்த 8 ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா தடுப்பு அமைப்புகள் முறியடித்தது.

பாகிஸ்தானின் 8 ஏவுகணை அடுத்தடுத்து தடுக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது. இதற்காக multi-layered air defence network முறை தடுப்பு நடவடிக்கை பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கு இந்தியா கடுமையான பதிலடியை தந்துள்ளது. அதன்படியே பாகிஸ்தானின் இருதயத்தில் அடித்தது இந்தியா. பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தியது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இஸ்லாமாபாத்தில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இது பாகிஸ்தானின் தலைநகர் ஆகும். பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தியது. லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+