எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை! பாஜக மீது திருமுருகன் காந்தி பரபரப்பு புகார்
Recommended Video

சென்னை: வரும் மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிக்கையாளர் மன்றத்தில் திருமுருகன் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: "2014ம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டு, தமிழகத்துக்கு அவர் வந்த போதே அவருக்கு எதிராக நாங்கள் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். அன்றிலிருந்து இப்போது வரை மே17 இயக்கம் சமரசம் இல்லாமல் பாஜக அரசின் தவறுகளை அம்பலப்படுத்தி உள்ளது.

2014ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ரேஷன் கடைகளை மூட மாட்டோம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். ஆனால் அதே ஆண்டு நவம்பர் 15ம் தேதி உலக வர்த்தக கழகத்திடம் இந்தியா ரேஷன் கடைகளை மூடுவதாக வாக்குறுதி கொடுத்தையும் மே 17 இயக்கம் அம்பலப்படுத்தியது. ஹைட்ரோ கார்பன் பாலிசி திட்டத்தையும் மே 17 இயக்கம் தான் அம்பலப்படுத்தியது. இவ்வாறு பல விஷங்களை அமல்படுத்தியதால் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டேன்.
இந்திய தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் பாரதிய ஜனதா கட்சியின் பிடியில் உள்ளது. பாஜக-அதிமுக கூட்டணி கட்சிக்கு எதிராக 30 இடங்களில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டும் மறுத்துள்ளார்கள்.
ஸ்டெர்லைட் ஆலையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. ஜல்லிக்கட்டு வன்முறையில் காவல்துறை அடித்ததுக்கு பின் விசாரணை நடக்கவில்லை. 7 தமிழர் விடுதலை நடக்கவில்லை. இதேபோன்று தமிழக மக்களின் பல பிரச்னையில் நீதி கிடைக்கவில்லை. பாஜக கூட்டணி இந்த தேர்தலில் வீழ்த்தப்பட வேண்டும். எனினும் வரும் மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் மே 17 இயக்கம் ஆதரவு தராது" என்றார். மேலும் தன்னை போன்று சிறை செல்லும் அரசியல் கைதிகளின் உடல் நிலையை சிதைத்து பாஜக மற்றும் அதிமுக சித்ரவதை செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications