கடினமான நேரங்களில்.. கைவிடுபவர்கள் நாங்கள் கிடையாது! ஸ்டாலினுக்கு அகிலேஷ் யாதவ் முழு ஆதரவு
சென்னை: திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது குறித்த கேள்வி எழுந்திருக்கிறது. இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
மட்டுமல்லாது தவெகவுக்கு ஆதரவை வழங்க காங்கிரஸ் எடுத்த முடிவை அகிலேஷ் யாதவ் கடுமையாகச் சாடினார். இது எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணிக்குள் அனல் பறக்கும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

அகிலேஷ் யாதவ், "கடினமான காலங்களில் ஒருவரையொருவர் கைவிடுபவர்கள் நாங்கள் அல்ல" என தனது 'இந்தியா' கூட்டணி உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி.) பின்னடைவைச் சந்தித்த பிறகு, அதன் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்த அடுத்த நாளே, அவர் இக்கருத்தை வெளியிட்டார். தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், மம்தா பானர்ஜி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இருக்கும் படங்களையும் அகிலேஷ் யாதவ் பகிர்ந்திருந்தார்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் தற்போது ஆதரவை அறிவித்துள்ளது. இந்த முடிவின் மூலம், திமுகவுடனான தனது நீண்டகால உறவை காங்கிரஸ் முறித்துக் கொண்டது. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் ஆதரவைத் திரட்ட த.வெ.க. தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது, காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன், த.வெ.க.வின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. இது 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற பெரும்பான்மை அளவை விட 5 இடங்கள் குறைவு ஆகும்.
இதற்கிடையில், தமிழகத்தில் அரசு அமைப்பது குறித்த முக்கிய விவாதங்களுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டமும், அக்கட்சியின் சென்னை அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றன. இடதுசாரி கட்சிகள் இரண்டும் தலா இரண்டு எம்எல்ஏக்களை பெற்றுள்ளன.
இன்று பிற்பகலில், இடதுசாரி கட்சிகள் இரண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) தலைவர்களைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பில், த.வெ.க.விற்கு ஆதரவு அளிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். வி.சி.க.வும் சட்டமன்றத்தில் இரண்டு இடங்களைக் கொண்டுள்ளது. இடதுசாரி கட்சிகள் மற்றும் வி.சி.க. ஆகியவை சேர்த்து 6 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை விஜய்க்கு வழங்கினால், த.வெ.க.வும் அதன் கூட்டணி அணியும் பெரும்பான்மை எண்ணிக்கையை எளிதில் கடந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications