பெரியார் பெயரை உச்சரிக்காத ஆளுநர் எங்களுக்கு தேவையில்லை! ''கெட் அவுட்''! திமுக போர்க்குரல்
சென்னை: பெரியார், அண்ணா, கருணாநிதி, திராவிட மாடல் என்ற பெயர்களை உச்சரிக்க மறுக்கும் ஆளுநர் தமிழகத்துக்கு தேவையில்லை என திமுக போர்க்குரல் உயர்த்தியுள்ளது.
மேலும், திமுகவின் அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கங்களில் 'கெட் அவுட் ரவி' என ஹேஷ்டேக் பதிவிடப்பட்டு அது டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போதே ஆளுநர் ரவி கோபமுடன் திடீரென வெளியேறிய நிகழ்வு தமிழக மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபையில் உரை
இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதில் உரையாற்றிய ஆளுநர் ரவி சில வார்த்தைகளை தவிர்த்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், அவரை அவையில் வைத்துக் கொண்டே அவருக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிக் அதிர்ச்சிக் கொடுத்தார். இதனால் அடுத்த நொடியே சட்டசபையிலிருந்து கோபமுடன் புறப்பட்டுச் சென்று விட்டார் ஆளுநர் ரவி.

எங்களுக்கு தேவையில்லை
இதனிடையே ஆளுநர் ரவி சபை நிகழ்வுகளில் இருந்து வெளியேறிய காட்சிகளை பதிவிட்டுள்ள திமுக, கெட் அவுட் ரவி எனவும் பதிவிட்டுள்ளது. மேலும், சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மத நல்லிணக்கம், பல்லுயிர் ஒம்புதல், திராவிடல் மாடல், பெரியார், அண்ணா, கருணாநிதி, ஆகிய வார்த்தைகளை படிக்க மறுக்கும் ஆளுநர் எங்களுக்கு தேவையில்லை என திமுக தனது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்துள்ளது.

கடுமையான பதிவுகள்
ஆளுநர் ரவிக்கு எதிராக திமுக மிக கடுமையான பதிவுகளை வெளியிட்டு வரும் சூழலில், அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியினர் கெட் அவுட் ரவி என்ற வாசகத்தை சமூகவலைதளங்களில் டிரென்ட் செய்து வருகின்றனர். இதற்கிடையே ஆளுநருக்கு எதிரான திமுகவின் பதிவுகளுக்கு பாஜக தரப்பில் பதிலடி கொடுக்கப்படுகிறது. இருப்பினும் திமுகவினர் ஆளுநர் தொடர்பாக போடும் பதிவுகள் வெகுஜனமக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

போராட்டம்
வரும் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ள நிலையில் கூட்டணிக் கட்சியான திமுக அதற்கு ஆதரவு கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
RN ரவி மகளின் அடடே விளக்கம்.. டாலருக்கு எதிராக 100ஐ தொட்ட ரூபாயின் மதிப்பு! வெறும் நம்பர்தானாம் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications