ஆளுநரே.. உங்க கோபத்தை ரசிக்கிறோம்.. களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கையே :எம்.பி அட்டாக்
சென்னை : களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கைதான் என்பதை நாங்கள் அறிவோம், ஆளுநரின் கோபத்தை ரசிக்கிறேன் என்று எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் கொள்கையை ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்த நிலையில், ஆளுநரின் கருத்தை விமர்சித்துள்ளார் சு.வெங்கடேசன்.
தமிழ்நாடு அரசின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக பொது நிகழ்ச்சிகளில் பேசுவது, திராவிட மாடலை விமர்சிப்பது, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை மாணவர்களிடம் கூறுவது என அடுத்தடுத்து திமுக அரசின் கொள்கைக்கு எதிராக ஆளுநர் பேசுவதால் திமுக அரசுக்கும் - ஆளுநருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானமும் இயற்றியது திமுக அரசு.

தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ச்சியாக கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் சூழலில் திமுக அரசின் திராவிட மாடல் கொள்கையை கடுமையாகச் சாடியுள்ளார் ஆளுநர் ரவி. ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி" எனத் தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் இந்தக் கருத்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆளுநர் ரவியின் கருத்துகளுக்கு பதில் கொடுத்துள்ளார்.

சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில்,
"திராவிட மாடல் செத்துப் போன தத்துவம்.
மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது.
பரிணாமக்கோட்பாடு மேற்கத்திய அடிமைத்தனம்
என்று சொல்லும் தமிழ்நாடு ஆளுநர் அவர்களே!
களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கை தான் என்பதை நாங்கள் அறிவோம்.
உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications