நாட்டின் பன்முகத்தன்மையை காக்க வேண்டும்... அறிவாலயத்தில் கொடி ஏற்றி முக ஸ்டாலின் பதிவு!!
சென்னை: நாட்டின் 74வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் இருக்கும் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை தேசியக்கொடியேற்றி பேசினார். தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் தமிழக அரசின் சிறப்பு விருதுகளை வழங்கினார்.

இதற்கு முன்னதாக அண்ணா அறிவாலயத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்து அனைவருக்கும் 74வது சுதந்திரதினம் நல்வாழ்த்துகளை முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ''இந்த சுதந்திர தினத்தில் சாதி, மத, இன வேறுபாடு களைந்து, சமத்துவ உணர்வோடு அரசியல் சட்டத்தின் அனைத்து உரிமைகள், நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாத்திட உறுதியேற்று, அண்ணா அறிவாலயத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications