உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம்.. வி த லீடர்ஸ் அமைப்பின் அடுத்தடுத்த பிளான் என்ன? அறிவித்த அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சி தேர்தல் எப்போது அறிவித்தாலும் அதில் வி த லீடர்ஸ் அமைப்பு போட்டியிடும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். அடிப்படை மாற்றத்தை ஒவ்வொரு கிராமத்தில் இருந்து கொண்டு வந்து அதற்கு பிறகு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு உள்ளாட்சியில் இருந்து சட்டமன்றம் வரை வி த லீடர்ஸ் மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்ற ஒற்றை கருத்தில் உள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, வி த லீடர்ஸ் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் தனது இயக்கம் போட்டியிடும் என்று அறிவித்த அண்ணாமலை, தனது இயக்கத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்த பிறகு அரசியல் கட்சியாக தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Annamalai announces

இதே அரசியலை நாம் பண்னக்கூடாது

தற்பொது வி த லீடர்ஸ் அமைப்பின் சார்பில் பல்வேறு நலப்பணிகளை அந்த இயக்கத்தினர் செய்து வருகிறார்கள். அந்த வகையில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே சோழபாண்டியில் 15,000 மரக்கன்றுகளை நடும் பணி நடைபெற்றது. இந்த நிகழ்வில் வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது:-

கையில் இருக்கும் மை கூட காயவில்லை. அதற்குள் வேஷ்டி மாறியாச்சு, கட்சி மாறியாச்சு, ஆட்சி மாறியாச்சு.. வாயும் மாறியாச்சு.. இந்த அரசியலை உடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் வி த லீடர்ஸ் இன்று களத்தில் இருக்கிறோம். இதுபோன்ற ஒரு மோசமான அரசியலுக்குள் நாமும் நம்முடைய நண்பர்களும் இதே அரசியலை நாம் பண்னக்கூடாது.

பிரச்சினையை தீர்க்க வேண்டும்

ஏனென்றால் இந்த அரசியலை நாம் பார்த்துவிட்டோம். இதில் மக்களுக்கு எந்தவிதமான புரோயஜனமும் இல்லை என்பதை உணர்ந்துவிட்டோம். இடைத்தேர்தலுக்கு வீதி வீதியாக வந்து பிரசாரம் செய்யக்கூடிய தலைவர்கள், தினமும் நம்முடைய வீட்டிற்கு வருவார்களா? அடிப்படை பிரச்சினையை தீர்ப்பார்களா? என்றால் இல்லை. எப்படி பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றால் உள்ளூரில் தலைவர்களை உருவாக்க வேண்டும்.

உள்ளூரில் தலைவர்களை உருவாக்கி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களை பணி செய்ய வைக்க வேண்டும். வி த லீடர்ஸ் அரசியல் கட்சியாக மாறும் போது நீங்கள் சொல்வீர்கள். நமக்கு இதுபோன்ற ஒரு அரசியல் கட்சி வேண்டும் இதற்குதான் நாம் காத்திருந்தோம்.. 234 தொகுதியில் தலைவர்கள் வேண்டும். பல தலைவர்கள் வேண்டும். 12,525 பஞ்சாயத்து உள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம்

பஞ்சயத்து தலைவர்கள் வேண்டும். அப்போதுதான் மாற்றம் நடக்கும். 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதை உருவாக்க கொஞ்சம் நேரம் வேண்டும். வரும் உள்ளாட்சி தேர்தலில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பு போட்டியிடும்..

அடிப்படை மாற்றத்தை ஒவ்வொரு கிராமத்தில் இருந்து கொண்டு வந்து அதற்கு பிறகு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு உள்ளாட்சியில் இருந்து சட்டமன்றம் வரை வி த லீடர்ஸ் மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்ற ஒற்றை கருத்தில் உள்ளது. ஒரு அறிக்கை கொடுத்து அவுங்க சரியில்லை என சொல்வதை விட நாம் உள்ளே இறங்கி செய்து காட்ட வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+