சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சேலம் பசுமை சாலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ.. அனைத்தும் ரத்து.. திமுக அதிரடி வாக்குறுதி

சேலம் 8 வழி சாலை திட்டம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டம் கைவிடப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    DMK Manifesto List: திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை - முழுவிவரம்

    சென்னை: சேலம் 8 வழி சாலை திட்டம், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டம் கைவிடப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது.

    திமுக கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியிடப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

    பல்வேறு நலத்திட்டங்களை கொண்டதாக திமுக தேர்தல் அறிக்கை உள்ளது. முக்கியமாக மக்களை அதிகம் கவரும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    விவசாயிகள், இல்லதரசிகள், அரசு ஊழியர்களின் மனங்களை குளிர்விக்கும் திமுக தேர்தல் அறிக்கை விவசாயிகள், இல்லதரசிகள், அரசு ஊழியர்களின் மனங்களை குளிர்விக்கும் திமுக தேர்தல் அறிக்கை

    போராட்ட திட்டங்கள்

    போராட்ட திட்டங்கள்

    தமிழகத்தில் மக்களை அதிகம் போராட வைத்த திட்டங்கள் குறித்தும் மக்களிடம் எதிர்ப்புகளை சந்தித்த திட்டங்கள் குறித்தும் திமுக அறிக்கையில் அறிவிப்புகள் இடம்பெற்று இருக்கிறது. கடந்த 4 வருடமாக அதிக எதிர்ப்புகளை சந்தித்த திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என்று திமுக கூறியுள்ளது.

    [39 தொகுதிகளும் நுனி விரலில்.. ஒன்இந்தியா தமிழில்]

    மீத்தேன் திட்டம்

    மீத்தேன் திட்டம்

    மீத்தேன் திட்டத்தை மொத்தமாக ரத்து செய்வோம் என்று திமுக கூறியுள்ளது. மேலும் நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை போராட வைத்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வோம் என்று திமுக அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. டெல்டாவில் இது பெரிய பிரச்சனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    தேனி திட்டம்

    தேனி திட்டம்

    அதே போல தேனியில் மக்களின் எதிர்ப்புகளை சந்தித்த நியூட்ரினோ திட்டம் ரத்து செய்யப்படும் என்று திமுக கூறியுள்ளது. அதிமுக இந்த அறிவிப்பை வெளியிடவில்லை. அதேபோல் சேலம் 8 வழி சாலை திட்டம் கைவிடப்படும் என்று திமுக கூறி இருக்கிறது.

    8 வழி சாலை

    8 வழி சாலை

    8 வழி சாலை திட்டத்தை மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இதனால் இந்த திட்டம் கைவிடப்படும். இதற்கு பதிலாக சேலம் சென்னை நெடுஞ்சாலை அகலப்படுத்தப்படும் என்று திமுக கூறியுள்ளது.

    English summary
    We will abolish all projects like Methane, Hydro Carbon, Salem 8 ways says DMK manifesto
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X