ஈரானை தாக்க போகிறோம்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்.. பிடனுக்கு போனை போட்டு சொன்ன இஸ்ரேல் நெதன்யாகு!
சென்னை: ஈரானில் எண்ணெய் அல்லது அணுசக்தி நிலையங்களை தாக்குவதை விட ராணுவ தளவாடங்களை தாக்குவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் பிடனிடம் தெரிவித்து உள்ளார். முழு அளவிலான போரைத் தடுக்கும் நோக்கில் மிகப்பெரிய பதிலடியை கொடுக்காமல்.. மிதமான பதிலடியை கொடுக்க வேண்டும் என்று பிடன் நெதன்யாகுவிடம் தெரிவித்து இருந்தார்.
ஆனால் பிடனின் இந்த கோரிக்கையை நெதன்யாகு ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக ராணுவ தளவாடங்களை தாக்குவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் பிடனிடம் தெரிவித்து உள்ளார்.

பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நீடிக்கும் இந்த நிழல் யுத்தம் ஒரு நேருக்கு நேர் இராணுவ மோதலாக வெடிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நேரம் உள்ள நிலையில்.. இஸ்ரேல் - ஈரான் இடையே போர் வெடிக்க போவதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் தாக்குதலுக்கு ஆதரவு தருவோம்.. ஆனால் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை ஆதரிக்கப் போவதில்லை என்று அதிபர் ஜோ பிடன் பிரதமர் நெதன்யாகுவிடம் பகிரங்கமாக தெரிவித்துள்ளாராம். பிடன் மற்றும் நெதன்யாகு சமீபத்தில் போனில் பேசியபோது, இதை பற்றி ஆலோசனை செய்துள்ளனர்.
உதவிய அமெரிக்கா: ஈரானுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க சார்பாக இஸ்ரேலுக்கு ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு வழங்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு மேம்பட்ட ஏவுகணை எதிர்ப்பு அமைப்பான THAAD அமைப்பை வழங்கி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பென்டகன் வெளியிட்டு உள்ளது.
பென்டகன் தலைவர் லாயிட் ஆஸ்டின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இஸ்ரேல் நாட்டின் வான் பாதுகாப்பை அதிகரிக்க உதவும் டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் (THAAD) அந்த நாட்டிற்கு அனுப்பிட்டு உள்ளது. THAADயை இயக்கம் பேட்டரி உள்ளிட்ட உபகரணங்கள் அதனுடன் தொடர்புடைய அமெரிக்க ராணுவ வீரர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இதற்கான அங்கீகாரத்தை அமெரிக்க பாதுகாப்புத் துறை அளித்துள்ளது.
THAAD ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு இஸ்ரேலின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை அதிகரிக்கும். இந்த நடவடிக்கை, இஸ்ரேலை பாதுகாப்பதற்கும், இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்களை ஈரானின் எதிர்கால பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கும் THAAD உதவும் என்று பென்டகன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
என்ன நடக்கிறது?: இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையேயான மோதல் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. தற்போது மோதல் மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது.
ஈரான் - பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் - லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்புகள் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே மோதல் நடக்கின்றன. சமீபத்தில்தான் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொலை செய்யப்பட்டார். அவரது பதுங்கு குழியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கொலை செய்யப்பட்டார். ஈரானிய இன்பார்மர் இஸ்ரேலுக்கு கொடுத்த முக்கியமான உளவுத்துறை தகவலின் அடிப்படையில், இந்த தாக்குதலை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
ஈரான் பதிலடி: இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீது பலத்த தாக்குதலை நடத்தி சேதங்களை ஏற்படுத்தியது. லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்பொல்லாஹ்வின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்றதற்கு பதிலடியாக, அக்டோபர் 1ம் தேதி ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அறிவித்து உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications