எதிபார்த்ததுதான்.. குஜராத்தில் நீதி கிடைக்காது.. ராகுல் காந்தி வழக்கு குறித்து கே.எஸ். அழகிரி கருத்து
புதுவை: தமிழகத்தில் ஆளுநரும் முதல்வரும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள் என்றும், மக்களுக்காக ஆளுநரும் முதல்வரும் இணைய வேண்டும் என்று புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதுவை வந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக புதுவை முதல்வர் ரங்கசாமியும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் நேற்று இரவு ஆலோசனை நடத்தினர். இதன் பிறகு, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- மக்களுக்காக ஆளுநரும், முதல்வரும் இணைந்து செயல்படுவதே அரசாங்கம்.

ஆளுநரும் முதல்வரும் இணக்கமாக செயல்பட்டால்தான் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதற்கு புதுச்சேரிதான் உதாரணம். புதுச்சேரியில் முதல்வரும் துணை நிலைஆளுநரும் இணக்கமாக உள்ளோம். நள்ளிரவு 12 மணிக்கு கூட மக்கள் நலத்திட்டங்கள் குறித்து நானும் முதல்வரும் விவாதித்து உள்ளோம். தமிழகத்தில் ஆளுநரும் முதல்வரும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள்.
பிரதமர் கூறிய படி முதல்வரும் ஆளுநரும் இரட்டை என்ஜின் போல செயல்பட்டு இந்த மாநிலத்தை முன்னுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்" என்றார். புதுவையை பொறுத்தவரை துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்கள் உண்டு. எனவே முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவதில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் பல்வேறு விவகாரங்களில் மோதல் நீடித்து வருவதை பார்க்க முடியும். கடந்த 12 ஆண்டுகளாக இதுதான் நிலைமையாக உள்ளது.
ரங்கசாமி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த போதும் ஆளுநருடன் இணக்கமான போக்கு இல்லை. அதன்பிறகு வந்த காங்கிரஸ் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கே நீடித்ததது. குறிப்பாக துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும் முதல்வராக இருந்த நாராயணசாமிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் நீடித்தது. தற்போதைய ஆட்சி காலத்தில் கூட ரங்கசாமி அவ்வப்போது தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக பேசியிருந்தார்.
தன்னால் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை என்றும் ரங்கசாமி பேசியிருந்தார். ஆனாலும் ஆளுநர் இதை மறுத்தார். எதிர்க்கட்சிகளும் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இணக்கமான போக்கு இல்லை என்று விமர்சித்தன. இந்த நிலையில், நாங்கள் இணக்கமாக இருக்கிறோம் என்று புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications