ஆர்.கே நகரை போல திருவாரூரிலும் மாபெரும் வெற்றி பெறுவோம்... டிடிவி தினகரன் நம்பிக்கை
சென்னை: இடைத்தேர்தல் நடத்தினால்தான் மக்கள் யார் பக்கம் என்பது தெரிய வரும் என்று அமமுக-வின் துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே நகரை போல திருவாரூர் தொகுதியிலும் அமமுக நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும். திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.

மேலும், திருவாரூர் தொகுதி வேட்பாளர் குறித்து சசிகலாவுடன் ஆலோசனை செய்யப்பட்டது. அணிகள் இணைப்பு குறித்து எங்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, துரோகிகளுடன் நாங்கள் இணைய மாட்டோம் என்றும் தினகரன் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, உடன்பாடு ஏற்படாவிட்டால் தனித்து போட்டியிட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, திருவாரூரில் நான் போட்டியிடுவேனா இல்லையா என்பது நாளை தெரியும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications