சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சோதனை முடியும் வரை வைகுண்டராஜனை வெளியே விட முடியாது.. வருமான வரித்துறை

சோதனை முடியும் வரை வைகுண்டராஜனை வெளியே விட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வி.வி. மினரல்சுக்கு சொந்தமான இடங்களில் ஐடி சோதனை- வீடியோ

    சென்னை: வைகுண்டராஜனை சோதனை முடிவடையும் வரை வெளியே விடபோவதில்லை என்று வருமான வரித்துறை சென்னை ஐகோர்ட்டில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    வி.வி.மினரல்ஸ் உரிமையாளரான வைகுண்டரானுக்கு சொந்தமான இடங்களில் நேற்று வருமானவரி துறையினர் சோதனை நடத்தினார்கள். இன்று 2-வது நாளாகவும் சோதனை நடைபெற்று வருகிறது. கடற்கரையோரம் உள்ள மணலில் தாதுக்களை பிரித்து எடுத்து ஏற்றுமதி செய்யும் தொழிலைதான் பிரதானமாக வைகுண்டராஜன் செய்து வருகிறார்.

    வரி ஏய்ப்பு?

    வரி ஏய்ப்பு?

    இதற்கான தலைமை அலுவலகம் திசையன்விளையில் உள்ளது. இந்த தாது மணல் ஏற்றுமதியில் பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததாக கூறி இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த தொழிலில், தடையை மீறி தாது மணல் ஏற்றுமதியை அவர் செய்திருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஆட்கொண்ர்வு மனு

    ஆட்கொண்ர்வு மனு

    இதனிடையே, வருமான வரி சோதனை தொடங்கி ஒருநாள் முடிவடைந்தும், வைகுண்டராஜனை வெளியே செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் வைகுண்டராஜனை, நெருங்கிய உறவினர்கள் சந்திக்க அனுமதி வேண்டும் என்றும் அவரது சம்பந்தி காமராஜ் சார்பில் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்று செய்யப்பட்டது.

    கைது செய்யவில்லை

    கைது செய்யவில்லை

    இதை அவசர வழக்காக கருதி நீதிபதிகள் செல்வம், நிர்மல்குமார் அமர்வு விசாரித்தது. அப்போது, வருமான வரித்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபால் பதிலளித்தார். அதில், "வைகுண்டராஜனை யாரும் கைது செய்யவில்லை, அவர் தன்னுடைய வீட்டில் சுதந்திரமாகத்தான் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    விசாரணை ஒத்திவைப்பு

    விசாரணை ஒத்திவைப்பு

    ஆனால் அதே நேரத்தில் நெருங்கிய உறவினர்கள் வருமான வரியின் சோதனைக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் அவரை சந்திக்கலாம் என்றும், இன்றோ அல்லது நாளையோ இந்த வருமான வரி சோதனை முடியும் வரை அவரை வெளியே அனுமதிக்க முடியாது என்றும் உறுதிபட தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்

    English summary
    We will not let Vaikundarajan freely till the income tax is checked: IT
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X