“தமிழ்நாட்டுக்கு ஒரு தீங்கு வந்தால் வேல் எனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறுவோம்”.. ஸ்டாலின் எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறிடுவோம்" என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"1967: அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது! தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருதென்றால் வேலெனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம்!" என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்.

MK Stalin Tamil nadu dmk

இதே நாளில் தான் 1967ல், பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 6-3-1967-ல், இந்திய பொதுத்தேர்தல் ஜனநாயக வரலாற்றில், முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த சாதனையைப் படைத்தது.

பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், கருணாநிதி உள்ளிட்டோர் அமைச்சர்களாகவும், தமிழில் பதவியேற்பு நிகழ்வினை நடத்தி, உளமார உறுதிமொழி கூறி ஆட்சிப் பொறுப்பேற்றனர். பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியில், சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்நிலையில், இந்த நாளில் அதனை நினைவுகூர்ந்து, மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை வாசகத்தோடு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்தி திணிப்பு விவகாரம் மீண்டும் சூடாக கிளம்பியுள்ள சூழலில் மத்திய அரசுக்கு காட்டமான எதிர்வினையை காட்டி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+