தினகரனிடம் எங்கள் முடிவை தெரிவிப்போம்.. செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி
தினகரனிடம் ஆலோசனை நடத்திய பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரனிடம் ஆலோசனை நடத்திய பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் சரியானதே என்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.

இதனால் தினகரன் தரப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி குற்றாலத்தில் பேட்டி அளித்துள்ளார்.
அதில், எங்கள் முடிவை தினகரனிடம் தெரிவிப்போம். தீர்ப்பு காரணமாக வருத்தம் இல்லை. நாங்கள் பிரிந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது.
நாங்கள் 18 பேரும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம், எனினும் எங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. நாங்கள் 18 பேரும் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது தவறான கருத்து.
மதுரையில் இன்று மாலை தினகரனுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நகர்வு குறித்து முடிவு செய்யப்படும். எங்களின் எண்ணத்திற்கு மாறாக தீர்ப்பு வந்துள்ளது, இந்த தீர்ப்பால் நாங்கள் வருத்தப்படவில்லை.
அதிமுகவை மீட்பதே எங்கள் நோக்கம். மீண்டும் தேர்தலில் நிற்க வேண்டும் என்றால் கண்டிப்பாக தேர்தலில் நிற்க தயார் என்றுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications