தலையே போனாலும் தன்மானத்தை விட மாட்டோம்... இனி சத்ரியனாக மாறுவோம் என்கிறார் விஜயபிரபாகரன்
தலையே போனாலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். சாணக்கியனாக இருந்தது போதும் இனி சத்ரியனாக மாறுவோம் என்றும் தெரிவித்துள்ளார் விஜயபிரபாகரன்.
சென்னை : தேமுதிக இதுவரை சாணக்கியனாக மட்டுமே இருந்தது. இனி சத்ரியனாக மாறும் காலம் வந்து விட்டது என்று விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார். இந்த தேர்தல் முடிவல்ல ஆரம்பம்தான் என்று கூறியுள்ள விஜயபிரபாகரன். தலையே போனாலும் தன் மானத்தை விட்டுத்தர மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதாக விஜயகாந்த் அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார் அவரது மகன் விஜயபிரபாகரன். பண்ருட்டியில் நிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், நாங்கள் கேட்கிற சீட் கொடுக்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு தொகுதியிலும் சீட் பறிக்கப்படும். யாருக்கும் தேமுதிகவினர் சளைத்தவர்கள் அல்ல என்று கூறினார்.
தேர்தலில் அதிமுகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம். எடப்பாடி தொகுதியில் அதிமுக மண்ணைக்கவ்வும் என்று கூறிய விஜயபிரபாகரன், முதல்வர் பழனிசாமி தோல்வி அடைவார் என்றார். காமராஜரையே தோற்கடித்த ஊர் இது என்றும் சொன்னார்.

யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல
தேமுதிகவினர் சாணக்கியன் ஆக இருந்தது போதும், இனி தேமுதிக சத்ரியன் ஆக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்த விஜயபிரபாகரன். தலையே போனாலும் தன்மானத்தை விட்டுத்தர மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். தேமுதிகவினர் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்றும் கூறியுள்ளார்.

ஒரே ஜாதிதான்
சாதியை பற்றி எனக்கு தெரியாது. சாதியைப்பற்றி பேசுவதில் நான் முட்டாளாகவே இருப்பேன். நமக்கு ஒரே சாதிதான் இருக்கிறது அது தேமுதிக என்ற சாதிதான் என்றும் தெரிவித்துள்ளார். நிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில் பேசிய பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த விஜயபிரபாகரன், மோடியையோ, எடப்பாடி பழனிச்சாமியையோ தான் விமர்சனம் செய்யவில்லை என்றார். அவர்களுக்கு நான் சவால் விட்டும் பேசவில்லை என்ன நடக்கப்போகிறதோ அதைத்தான் சொன்னேன் என்றார் விஜயபிரபாகரன்.

தேமுதிகவிற்கு வெற்றி
அதிமுகவை நாங்கள் உச்சத்தில் வைத்து பார்த்தோம். அவர்கள் எங்களை கீழே தள்ளி விட்டு விட்டார்கள். சட்டசபைத் தேர்தலில் தேமுதிக 99 சதவிகிதம் தனித்துதான் போட்டியிடும் என்று கூறிய விஜயபிரபாகரன். எந்த தொகுதியில் நான் போட்டியிட்டாலும் தேமுதிக தொண்டர்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள் என்றும் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு இல்லை
தமிழகத்தில் ஊழல் செய்யாத ஒரே கட்சி தேமுதிகதான் என்று சொன்ன விஜயபிரபாகரன், தேமுதிகவினர் யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்றும் சொன்னார். திமுக வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு கூறியுள்ளதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஜயபிரபாகரன், திமுக இதுவரை ஆட்சியில் இருந்ததில்லை. இனி ஜெயித்து ஆட்சிக்கு வந்தாலும் சந்தோஷம்தான் என்றும் தெரிவித்தார்.

கூட்டணி வைத்ததே தவறுதான்
2011ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் சேர்ந்ததுதான் தவறு என்று அம்மாவும் அம்மாவும் சொல்லி வந்தனர். இந்த கூட்டணி இப்போதே விலகி விட்டது. இந்த தேர்தலில் அதிமுகவிற்கு எதிரான போட்டியாகத்தான் தேமுதிக செயல்படும். வாரிசு அரசியல் பற்றி யாரையும் விமர்சனம் செய்ய முடியாது என்றும் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications