தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் அடுத்த 2 நாளைக்கு கனமழை பெய்யும்.. வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடலூர், நாகை உள்பட ஐந்து மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை இயல்பைவிட பாதி இடங்களில் அதிகமாக சில இடங்களில் குறைவாகவும் பெய்திருக்கிறது.ஆனால் ஒட்டுமொத்த அளவில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்தமுறை நன்றாகவே பெய்திருக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த இருவாரங்கள் வெளுத்துக்கட்டிய நிலையில் தற்போது பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே காணப்படுகிறது. தமிழத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டும் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது.

நெல்லை, நீலகிரி

நெல்லை, நீலகிரி

குறிப்பாக நெல்லை, கோவை, கன்னியாகுமரி,நீலகிரி தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

இன்று வானிலை எப்படி

இன்று வானிலை எப்படி

இந்நிலையில் இன்றைக்கு (வியாழக்கிழமை) வெப்பச்சலன காரணமாக ஓரிரு இடங்களில் மழையும் பெரும்பானலான மாவட்டங்களில் வறண்ட் வானிலையும் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம்

வானிலை மையம்

அதேநேரம் நாளை தொடங்கி (வெள்ளி சனி) அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐந்து மாவட்டங்கள்

ஐந்து மாவட்டங்கள்

அதாவது காவிரி டெல்டா மாவட்டங்ளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில்

சென்னையில்

தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த இரண்டு தினங்களுக்கு ஒரு சில இடங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றம் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+