குட் நியூஸ்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இங்கெல்லாம் வெளுக்க போகுது மழை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    பெங்களூருவில் இடியுடன் கனமழை- காலை முதல் வெளுத்து வாங்குகிறது - வீடியோ

    தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    நேற்று திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கனமழை வெளுத்தது. இதேபோல் கன்னியாகுமரி, திருச்சி, கோவை, தர்மபுரி, வேலூர் தேனி, மதுரை, திண்டுக்கல், திருவள்ளூர், திருப்பத்தூர், பெரம்பலூர் உள்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

    தமிழகத்தில் மழை

    தமிழகத்தில் மழை

    இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பினை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, தமிழகம், புதுவை, காரைக்காலில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

    ஈரோடு திருப்பூர்

    ஈரோடு திருப்பூர்

    கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. மே1ம் தேதி அன்று தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரையிலும், அவ்வப்போது 60 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசும்.

    தெற்கு அந்தமான் பகுதி

    தெற்கு அந்தமான் பகுதி

    இதேபோல் மே 2ம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் அதனை அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வரையிலும், அவ்வப்போது 60 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசும். மே 3ம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் அதனை அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளி காற்று 50 கிலோமீட்டர் முதல் 60 கிலோமீட்டர் வரையிலும், அவ்வப்போது 70 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசும். மேலும் இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடனும், அவ்வப்போது மிகவும் சீற்றத்துடனும் காணப்படும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னையில் எப்படி

    சென்னையில் எப்படி

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்ப நிலை 28 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டியும் இருக்கும்" இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 9 செமீ மழை பெய்தது. அடுத்தபடியாக கோவை மற்றும் காங்கேயத்தில் தலா 6 செமீ மழையும், திருச்சி சமயபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தலா 5 செமீ மழை பெய்திருந்தது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+