ஆஹா சூப்பர்.. தமிழகத்தில் இந்த ஆறு மாவட்டங்களில் இன்று நல்ல மழை இருக்காம்!
சென்னை: தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்பட ஆறு மாவட்டங்களில், இன்று (செவ்வாய்) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடை மழை இந்தாண்டு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் வெப்பசலனத்தால் மழைப்பொழிவு அவ்வப்போது இருக்கும்

ஆனால் கோடை மழை இந்தாண்டு பெரிதாக கைகொடுக்கவில்லை. தமிழகம் முழுவதுமே வறண்ட வானிலையே காணப்படுகிறது. இதனால் மக்கள் புழுக்கத்தில் தவித்து வருகிறார்கள். வெயிலும் 100 டிகிரியை தாண்டி அடித்து வருகிறது. ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் முடங்கி கிடப்பதால் மக்களுக்கு வெயில் கொடுமையில் இருந்து கொஞ்சம் தப்பி உள்ளனர். எனினும் கடந்த சில நாட்களாக சில இடங்களில் வெப்பச்சலனத்தால் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் எங்கெல்லாம் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் சில தினங்களாக, வெப்பச் சலனத்தால் மழை பெய்து வருகிறது. நேற்று மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், வெயில் கொளுத்தியது.
இன்று, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், லேசானது முதல், மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவித்துள்ளது.
-
Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்!












Click it and Unblock the Notifications