அதிகாலையே தொடங்கிய ஆட்டம்.. சென்னையில் விடாமல் பெய்யும் கனமழை.. வெளுத்து வாங்குகிறது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு லேசாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

இந்த நிலையில் காலை 4 மணியில் இருந்து பரவலாக மழை பெய்து கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த சனிக்கிழமை வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

சென்னை

சென்னை

இதன் காரணமாக மழையின் தீவிரம் அதிகரித்து உள்ளது.இந்த நிலையில் சென்னையில் அதிகாலையில் இருந்து மழை பெய்து வருகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது. வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது. மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது.

மழை

மழை

அடுத்த 2 -3 மணி நேரங்களுக்கு சென்னையில் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீவிர மழை பெய்யும் என்று வானிலை மிச்சம் எச்சரித்து உள்ளது. எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது. அதிகாலையிலேயே பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

 குழாய்கள்

குழாய்கள்

வரும் நாட்களில் இன்னும் பருவமழை தொடங்கியதும் இன்னும் தீவிரமாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் எப்போது மழை பெய்தால் வெள்ளம் ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க சென்னையில் வெள்ள நீர் வெளியேற்ற குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. இன்னும் 10 சதவிகித பணிகள் மீதம் உள்ளன.

பணிகள்

பணிகள்

சாலை ஓரங்களில் குழி தோண்டி பணிகளை செய்து வருகின்றனர். பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளனர். பருவமழை தீவிரம் அடையும் முன் பணிகளை முடிப்பதற்கான வேலைகள் இரவு பகலாக நடந்து வருகின்றன. அதிகபட்சம் 4-5 நாட்களில் பணிகள் மொத்தமாக முடியும் வாய்ப்புகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+