வெளியில போறப்ப கவனமாக போங்க.. தாக்க வரும் வெப்ப அலை.. அடுத்த 5 நாட்கள் ஜாக்கிரதை.. வானிலை வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலை தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.

அடுத்த 3-5 நாட்களில் வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு இமயமலைப் பகுதியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கடுமையான வெப்பநிலை நிலவும். தென் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழ்நாட்டு பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும். சில இடங்களில் நீண்ட நேரம் மழை பெய்யும்.

ஆனாலும் மழை இல்லாத சமயங்களில் வெப்ப அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுக்க வெயில் வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த 4 நாட்களாக வெப்ப காற்றும் வடமாநிலங்களில் வீசி வருகிறது வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் 35.9 டிகிரி செல்ஸியஸ் முதல் 37.78 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை பதிவாகி இருக்கிறது . பல மாநிலங்களில் வெப்ப அனல் காற்று வீச தொடங்கி உள்ளது.

Weather News: Next 5 days will be very difficult as the heat wave will attack parts of India

குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானாவில் வெப்பநிலை மிக அதிகமாக பதிவாகி இருக்கிறது. மத்திய இந்தியாவில் ஏப்ரல் மாதம் சராசரியாக 37.78 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. வடமேற்கு இந்தியாவில் 35.9 டிகிரி செல்ஸியஸ் பதிவாகி உள்ளது.

சென்னை: இது சராசரி அளவை விட 3.35 டிகிரி செல்சியாஸ் அதிகம் ஆகும். மும்பையில் தார் பாலைவனத்தில் இருப்பதை விட அதிக வெப்பநிலை பதிவானது. அங்கே 40 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல்லில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு அதிகமாக வெப்பம் பதிவானது. ஈரோட்டில் நேற்று 100.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. சேலத்தில் 100.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. அதேபோல் நாமக்கல்லில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Weather News: Next 5 days will be very difficult as the heat wave will attack parts of India

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது. நேற்று சேலத்தில் 100 நேற்றும் டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரித்து உள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் உயர்ந்து உள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெப்பம் 93 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவானது. வேலூரில் 97 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவானது. ஈரோடு, நாமக்கல்லில் 99 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. வரும் நாட்களில் இந்த பகுதிகளில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+