ஆரஞ்சு அலர்ட்.. இன்று 12 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை.. மிக கன மழை பெய்ய போகிறது!
சென்னை: இன்று தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் மிக தீவிர கனமழை பெய்து வருகிறது. கிழக்கு காற்றும் கனமழைக்கு காரணமாக அமைந்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி பொதுவாக கடலுக்கு மேலே இருந்தால் மழை கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆனால் தரைக்கு மேல் இருந்தால் மழை மிக அதிகமாக இருக்கும்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக்கு தரைக்கு மேலே 5-9 கிமீ உயரத்தில் இருந்தது. இதுதான் சென்னையில் மிக அதிக கனமழையை ஏற்படுத்தியது. நேற்று முதல்நாள் திடீரென சென்னையில் அதிக அளவில் மழை கொட்டி தீர்க்க இதுவே காரணமாக அமைந்தது. ஆனால் சென்னை வானிலை ஆய்வு மையத்திடம் இருந்த கருவிகளை வைத்து இதை கணிக்க முடியவில்லை.

சென்னை வானிலை மையம்
தரைக்கு மேலே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி எப்படி இருக்கிறது என்பதை சென்னை வானிலை மைய அதிகாரிகளால் கணிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்றும் தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆரஞ்ச் அலர்ட்
தமிழ்நாட்டில் மொத்தம் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது/

மிக கனமழை
இந்த மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று காலையில் இருந்து மிக அதிக கனமழையை எதிர்பார்க்கலாம். இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். கடல் பகுதியில் காற்றின் வேகம் 40 கிமீ என்ற அளவில் இருக்கும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications