இன்றுதான் ஆக்சன்.. இந்த "பெல்ட்" முழுக்க தீவிர கனமழை பெய்ய போகிறது.. வெதர்மேன் தந்த அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் கொடுத்துள்ளார்.

Recommended Video

    9 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு முழுக்க தீவிர கனமழை பெய்து வருகிறது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறவில்லை என்றாலும் மிக கனமழையை கொடுத்து வருகிறது.

    நேற்று தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்தது.

    இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் கொடுத்துள்ளார். அவர் செய்துள்ள போஸ்டில், மேகங்கள் நகராமல் சென்னை முதல் கடலூர் வரையிலான பகுதிகளில் மழை தீவிரம் எடுக்க போகிறது.இன்று இரவில் இருந்து நாளை காலை வரையிலான நேரத்தில் மழை தீவிரம் எடுக்கும். அடுத்த ஒன்று இரண்டு மணி நேரம் கழித்து கன்னியாகுமரியில் மழை குறையும். தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி

    காயல்பட்டினத்தில் மட்டும் 300 மிமீ மழை பெய்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடியில் சில மணி நேரங்கள் மழை நீடிக்கும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் பல இடங்களில் 60-90 மிமீ மழை பெய்துள்ளது. செம்பரம்பாக்கம், தாம்பரம், சோளிங்கநல்லூரில் கிட்டத்தட்ட 100 மிமீ மழை பெய்துள்ளது. நாகையில் கிட்டத்தட்ட 200 கிமீ மழை பெய்துள்ளது.

    செஞ்சுரி

    செஞ்சுரி

    தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை செஞ்சுரி அடித்துள்ளது. இன்றும் நாளையும் சென்னை - நாகப்பட்டினம் பெல்ட்டில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். டெல்டா முதல் ராமநாதபுரம் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    எங்கு

    கடலூர், விழுப்புரம், நாகை, பெரம்பலூர், தஞ்சாவூர், செனகல்பேட்டை, திருவண்ணாமலையின் கிழக்கு இடங்கள், கள்ளக்குறிச்சி, அரியலூர், காரைக்கால், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் எல்லாம் மழை பெய்யும். சென்னை முதல் கடலூர் வரை கனமழைக்கு ஏற்ற இடமாக இருக்கும்..

    செஞ்சுரி அடிக்கும்

    செஞ்சுரி அடிக்கும்

    நேற்றை விட சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இன்று அதிக மழை பெய்யும். நேற்று சென்னையில் பல இடங்களில் 50-100மிமீ வரை மழை பெய்தது. நாளை சென்னையில் பல இடங்களில் 100மிமீ வரை மழை பெய்யும். தாழ்வு பகுதி இருக்கிறதோ இல்லையோ. அது மேட்டர் இல்லை. அடுத்த 3-4 நாட்களுக்கு வட தமிழகம் முதல் தெற்கு தமிழக கடலோர பகுதிகளுக்கு கனமழை அச்சுறுத்தல் இருக்கும்.

    கனமழை அச்சுறுத்தல்

    கனமழை அச்சுறுத்தல்

    தூத்துக்குடி, நாகையில் ஏற்கனவே இந்த மழை பெய்துவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக இந்த மேகம் நகரும். இது சென்னை கடலூர் பெல்ட்டில் மழையை கொடுக்கும். வடகடலோர மாவட்டங்களில் இன்று ஆக்சனை பார்க்கலாம். கன்னியாகுமரியில் கனமழை காலை 10-11 மணிக்கு குறையும்.

    எவ்வளவு

    எவ்வளவு

    குறைவாக மழை பெய்து வந்த மதுரை, விருதுநகரில் கொஞ்சம் நல்ல மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த வடகிழக்கு பருவமழையில் நாளையோடு 600 மிமீ மழை அளவை பெறும். 2015க்கு பின் இவ்வளவு மழையை தமிழ்நாடு பெறுகிறது. சென்னையில் இன்னும் 100மிமீ மழை பெய்தால் இந்த மாதத்தின் சராசரி மழை அளவு 1000 மிமீ அளவை தாண்டும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+