நவ. 4 வரை தமிழ்நாட்டில் தீவிர கனமழை.. 9 மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் 4 வரை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுக்க கடந்த 2 நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலை இரண்டும் சேர்ந்தும் தீவிர மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெற்று வருகிறது. இதனால் மழை பெய்து வருகிறது.

வானிலை மையம்
இந்த நிலையில் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் நவம்பர் 4 வரை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும். சென்னையில் மிதமானது முதல் கனமானது வரையிலான மழை பெய்யும்.

ஆரஞ்சு அலர்ட்
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த 9 மாவட்டங்களில் இன்று முதல் நவம்பர் 2 வரை 3 நாட்களுக்கு அதி தீவிர கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்டா
டெல்டா மாவட்டங்களில் வரும் நவம்பர் 2-ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்று கணிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம மாவட்டங்களிலும் வரும் நவம்பர் 2-ம் தேதி வரை மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே ரெட் அலர்ட்
ஏற்கனவே தமிழ்நாட்டில் 4 தென்மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது கூடுதலாக மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications