கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் குளுகுளு அறிவிப்பு.. இந்த 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்!
சென்னை: தமிழகத்தில் எல்லா பகுதிகளில் வெயில் கொளுத்தும் என்ற போதிலும் இன்றும் நாளையும், நீலகிரி ,தேனி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சித்திரை பிறந்ததில்இருந்து தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக அதிகரித்து வருகிறது. பல ஊர்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. அத்துடன் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படுகிறது.

நேற்று தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருச்சியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகி இருந்தது. மதுரை, சேலம், திருத்தணி பகுதியில் 102 டிகிரி பாரன்ஹீட்டும், திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி இருந்தது.
இந்நிலையில் இன்றும் நாளையும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய நீலகிரி, திருநெல்வேலி, கோவை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
மதுரை, திருச்சி, கரூர், சேலம், வேலூர் மாவட்டங்களில் வெயில் 102 டிகிரி பாரன்ஹீட் முதல் 104 டிகிரி பாரன்ஹீட் வரையும் கொளுத்தும் என்பதால் மக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வீடுகளை விட்டு வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. சென்னையில் அதிகபட்சமாக 95 டிகிரி வெப்ப நிலை காணப்படும் குறைந்த பட்சம் 81 டிகிரி வெப்ப நிலை காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications