நவம்பர் 25, 26 தேதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமோ புயலோ உருவாக வாய்ப்பு- தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: நவம்பர் 25, 26 தேதிகளில் புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தென் தமிழகம் மற்றும் மேற்கு தமிழக பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு அதிக மழை பொழிவு இருக்கும்.
வெப்பச்சலனம் காரணமாக அரபிக் கடலோர பகுதிகளான கேரளா, தெற்கு மற்றும் மேற்கு தமிழக பகுதிகளில் கனமழை பொழியும்.

மழை
இந்த மாற்றத்தால் 19-ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை இருக்கும். அதன் பிறகு படிப்படியாக குறையும். நெல்லையில் பாபநாசம் தொடங்கி மாஞ்சோலை வரையிலான பகுதிகளிலும் கொடைக்கானல், குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் மிக கனமழை பொழிவு பதிவாகலாம்.

நவம்பர் 25,26
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை பொருத்தவரை 19-ஆம் தேதிக்கு பிறகு மழை இருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் நவம்பர் 25,26 தேதிகளில் அதிக மழை பொழிவு இருக்கலாம்.

கனமழை
அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் புயலாகவும் உருவாக வாய்ப்பிருக்கிறது. ஆனால் அந்த புயல் எங்கு உருவாகும் என்பதையும் எங்கு கரையை கடக்கும் என்பதையும் அறிய சில நாட்கள் ஆகும் என தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

தூத்துக்குடி
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடியில் நேற்று முன் தினம் மிக அதிக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications