இதுதான் ஹாட் ஸ்பாட்.. அடுத்த 4 நாட்களுக்கு என்ன நடக்கும்..? தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்றில் இருந்து 4 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை உச்சத்தில் இருக்கிறது. இதுவரை இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் தமிழ்நாட்டை தாக்கிவிட்டன. தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிக கனமழை பெய்து கொண்டு இருக்கிறது.
வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் தீவிரமாக கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் வானிலை குறித்து சென்னை வெதர்மேன் போஸ்ட் செய்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன்
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் செய்துள்ள போஸ்டில், சென்னையில் நேற்று இரவு மழை பெய்தது. இன்று காலையும் கொஞ்சம் மழை பெய்யும். அதன்பின் டிசம்பர் 1 வரை விட்டு விட்டு மழை பெய்யும். ஆனால் சென்னையில் மோசமான மழை என்பது முடிந்துவிட்டது. பூண்டி நீர் தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

12000 கன அடி
பூண்டி நீர் தேக்கத்திற்கு நீர் வரத்து 12 ஆயிரம் கன அடியாக உள்ளது. நீர் வெளியேறும் அளவு 12 ஆயிரம் கன அடியாக உள்ளது. இது மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. செம்பரம்பாக்கத்திற்கு நீர் வரத்து 5 ஆயிரம் கன அடியாக உள்ளது. நீர் வெளியேறும் அளவு 3100 கன அடியாக உள்ளது. அடையாருக்கு செம்பரம்பாக்கத்தில் இருந்து மட்டும் நீர் வரவில்லை. ஆதனூர் உட்பட மற்ற பகுதிகளில் இருந்தும் இதற்கு நீர் வரத்து உள்ளது.

தென் தமிழ்நாடு
தென் தமிழ்நாட்டில் நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் அடுத்த 2 நாட்களுக்கு ஹாட் ஸ்பாட்டாக இருக்கும். மாஞ்சோலையில் மழை அளவை கண்காணிக்க வேண்டும். மணிமுத்தாறு மட்டுமே இந்தவருடம் இதுவரை நிரம்பவில்லை. இன்னும் 2-3 நாட்களில் அதுவும் நிரம்பிவிடும். கேரளா அருகே அரபிக்கடலில் தாழ்வு பகுதி உருவாக்கிக்கொண்டு இருக்கிறது.
மழை
இதனால் கேரளாவில் அடுத்த 1 -2 நாட்களுக்கு மழை இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 2-3 நாட்களுக்கு மழை இருக்கும். அடுத்த தாழ்வு பகுதி உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. இது வலுவாக இருந்து புயலாக மாறினால் ஆந்திரா நோக்கி செல்லும்.

வீக்
இது வலிமை குறைந்து வீக்காக இருந்தால் மீண்டும் வடதமிழ்நாட்டிற்கு வந்து சேரும். இப்போது வரை இது மத்திய அல்லது மேற்கு ஆந்திராவை தாக்கும் என்றே கணிப்புகள் சொல்கின்றன. இன்னும் நேரம் இருக்கிறது. தெளிவான புள்ளிகள் கிடைத்தபின் அப்டேட் செய்யப்படும். இது மட்டுமா ஆந்திராவிற்கு என்றால் அதோடு ஈரப்பதமும் செல்லும் என்பதால் நமக்கு மழையில் இருந்து பிரேக் கிடைக்கும், என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications