கோவை மக்களுக்கு குஷியான செய்தி.. நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்! சதர்ன் ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு..!
சென்னை: கோடை விடுமுறை காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக சிறப்பு ரயிலை அறிமுகப்பட்டுள்ளது தென்னக ரயில்வே. அதன்படி கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கேரளா வழியாக கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயில் ஒன்றை தென்னக ரயில்வே இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிக பெரிய பயணிகள் சேவை நிறுவனமான இந்திய ரயில்வே லட்சக்கணக்கான பணியாளர்களோடு இயங்கி வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் லட்சக்கணக்கான பயணிகளை சுமந்து இந்தியாவின் பல்வேறு மூலைகளுக்கும் பயணிக்கிறது.

சராசரியாக ஆண்டுக்கு சுமார் 500 கோடி பேர் இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் பயணிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைந்த கட்டணம் பாதுகாப்பான பயணம் என்ற தாரக மந்திரத்தோடு இயங்கும் இந்திய ரயில்வே பயணிகளின் வரப் பிரசாதமாக திகழ்கிறது
இருந்து தற்போது கோடை விடுமுறை காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக சிறப்பு ரயிலை அறிமுகப்பட்டுள்ளது தென்னக ரயில்வே. அதன்படி கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கேரளா வழியாக கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயில் ஒன்றை தென்னக ரயில்வே இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கேரளா வழியாக கோவைக்கு வாராந்திர சிறப்பு ஒன்றை தென்னக ரயில்வே இயக்கவுள்ளது.
கோடைகால கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. ஜூன் 29ம் தேதி வரை இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில் போத்தனுர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும். அதன்படி மங்களூர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 9.30க்கு புறப்படும் சிறப்பு ரயில்(06041) அன்றைய தினம் மாலை 5.25க்கு கோயம்புத்தூர் பிரதான ரயில் நிலையம் வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமைகளில் இரவு 10.15க்கு புறப்படும் சிறப்பு ரயிலானது (06042) ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.55க்கு மங்களூர் சென்ட்ரல் சென்றடையும். அதன்படி மங்களூர் சென்ட்ரலில் இருந்து வரும் மே 18, 25 மற்றும் ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் சனிக்கிழமைகளில் காலை 9.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் வண்டி எண். 06041 அதே நாள் மாலை 5:25 மணிக்கு கோவையை வந்தடையும்.
மறு மார்க்கத்தில் கோவையில் இருந்து வருகின்ற 18, 25 மற்றும் ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் சனிக்கிழமைகளில் இரவு 10.15 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் வண்டி எண் 06042 மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூர் சென்றடையும். இந்த சிறப்பு ரயிலில் 19 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளும், 2 மாற்றுத்திறனாளிகள் அமரும் வசதியுடன் ஒருங்கிணைந்த முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்" என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications