நமக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடக்கூடாது.. தினகரன் வைத்த வேண்டுகோள்.. கடைசியில் சொன்ன அந்த வார்த்தை
சென்னை: பிப்ரவரி 7ல் தமிழகம் வரும் சசிகலா அவர்களுக்கு கிருஷ்ணகிரியில் சிறப்பாக வரவேற்பு கொடுத்துவிட்டு அனைவரும் பாதுகாப்பாக திரும்பி செல்ல வேண்டும். சென்னை வரை பின்தொடரக் கூடாது. அப்படி தொடர்ந்தால், பெங்களூரு நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே இந்த விஷயத்தில் நமக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது என அமமுகவினருக்கு தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் அருகே வேலம்மாள் ஐ டா ஹாலில் அ ம முக அமைப்பு செயலாளர் மகேந்திரன் இல்ல திருமண விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பிப்ரவரி 7ல் தமிழகம் வருகிறார்.
சசிகலாவுக்கு தமிழக எல்லையான கிருஷ்ணகிரியில் நாம் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். ஜனவரி 27 ம் தேதியே சசிகலா தமிழகம் வருவார் என ஏராளமானோர் வாகனங்களில் வரவேற்க தயாரானீர்கள். தற்போது பிப்ரவரி 7ல் வர உள்ள சசிகலா (சின்னம்மா வை) வரவேற்க வேண்டும்.

வரவேற்பு
கிருஷ்ணகிரியில் சிறப்பாக வரவேற்பு கொடுத்துவிட்டு அனைவரும் பாதுகாப்பாக ஊருக்கு திரும்பி செல்ல வேண்டும். நீங்கள் ஆர்வ மிகுதியில் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் இருந்து சென்னையை நோக்கி அனைவரும் வந்தால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். அதனால் நமக்கு எந்த விதமான கெட்டபெயரும் வந்துவிடக்கூடாது. அந்த சாலையில் பயணிப்பவர்களுக்கும், அந்த பகுதியிலே குடியிருப்பவர்களுக்கும் எந்த இடையூறும் ஏற்பட்டுவிடக்கூடாது.

கலங்கம் கூடாது
சின்னம்மாவை வரவேற்க வருபவர்கள் கட்டு கோப்புடன் இராணுவம் போல் வர வேண்டும். காவல்துறைக்கு இடையூறு இல்லாமல் சசிகலாவின் பெயருக்கும் , உங்கள் சகோதரனின் (தினகரனின்) பெயருக்கும் கலங்கம் ஏற்படாமல் தொண்டர்கள் வரவேற்பு அளிக்க வேண்டும் என்றார்.

அவப்பெயர் வேண்டாம்
இதற்கிடையே ட்விட்டரில் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், தியாகத்தலைவி சின்னம்மா, வருகிற 7.2.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்திற்கு வருகிறார்கள். தமிழக எல்லையில் இருந்து சென்னை வருகிற வரை வழி நெடுக அவர்களுக்கு அளிக்கப்படுகிற வரவேற்பை, பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எந்தவித இடையூறும் இன்றி அமைத்துக்கொள்ள வேண்டும், கொரோனா கால வழிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து, தியாகத்தலைவி சின்னம்மா அவர்களுக்கும் உங்கள் அன்புச் சகோதரனாகிய எனக்கும் எவ்வித அவப்பெயரும் ஏற்படா வண்ணம் கழக உடன்பிறப்புகள் பங்கேற்றிட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

திமுக தலைதூக்கக்கூடாது
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த இயக்கத்தை மீட்டெடுத்திடவும் அம்மா அவர்களின் உண்மையானஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்திடவும் வரும் தேர்தலில் தீயசக்தியான திமுகவை தலையெடுக்கவிடாமல் செய்திடவும் அம்மா அவர்களின் உண்மை தொண்டர்களாகிய நாம்அனைவரும் ஒற்றுமையோடு இருந்து செயல்படுவோம்" இவ்வாறு தினகரன் கூறியுள்ளார். அதிமுக உடன் தொடருவது பங்காளி சண்டை என்பதை மறைமுகமாக குறிப்பிட்டுள்ள டிடிவி தினகரன் திமுகவை ஆட்சியமைக்க விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளதையும் தனது ட்வீட்டில் வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications