இல.கணேசன் வீட்டில் விசேஷம்.. களைகட்டிய சதாபிஷேகம்.. செண்டை மேளம் அடித்த மம்தா பானர்ஜி
சென்னை: மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசன் சகோதரர் சதாபிஷேக விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் மமதா பானர்ஜி செண்டை மேளம் வாசித்து அசத்தினார்.
முன்னாள் பாஜக தலைவரும், மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநருமான இல.கணேசன் விடுத்திருக்கும் அழைப்பின்பேரில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று மாலை சென்னை வந்தடைந்தார்.
சென்னை வந்த மமதா பானர்ஜி, முதல்வர் ஸ்டாலினை, அவரின் இல்லத்துக்கே சென்று நேரில் சந்தித்தார். அதைத் தொடர்ந்து, ஸ்டாலின் குடும்பத்தினரையும் மமதா சந்தித்துப்பேசினார்.

சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மமதா பானர்ஜி, முதல்வர் ஸ்டாலின் என்னுடைய சகோதரர் போன்றவர். குடும்ப நிகழ்ச்சி தொடர்பாக கவர்னர் விடுத்த அழைப்புக்காகச் சென்னை வந்திருக்கிறேன். ஆனால், ஸ்டாலினைப் பார்க்காமல் நான் எப்படி சென்னையிலிருந்து செல்லமுடியும். இரண்டு அரசியல் தலைவர்களும் சேர்ந்து அரசியலைத் தவிர வேறு விஷயங்களைப் பற்றியும் பேசலாம், நாங்கள் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. அரசியலைவிட வளர்ச்சி முக்கியம் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்.
இன்று காலையில் சதாபிஷேக விழாவில் பங்கேற்க வந்தார் மமதா பானர்ஜி. திருமண மண்டப வாசலில் பெரிய அளவில் செண்டை மேளம் வைத்து இசைத்துக்கொண்டிருந்தனர். அதை சிறிது நேரம் ரசித்து கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் மேளம் இசைப்பவர்களிடம் இருந்த குச்சியை வாங்கிய மமதா உடனே உற்சாகமாக இசைக்க ஆரம்பித்தார். மேற்கு வங்க முதல்வரின் எளிமையை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

பொதுவாகவே ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே அரசியல் ரீதியான உரசல்கள் இருக்கும். மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருக்கும் இல. கணேசன் அழைப்பின் பேரில் சென்னை வந்துள்ள மமதா பானர்ஜி உற்சாகமாக விழாவில் பங்கேற்று செண்டை மேளம் இசைத்துள்ளார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், டி.ஆர். பாலு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications