"80 ரூபாய்க்கு சண்டை.." ஆட்டோ டிரைவரிடம் சம்பவம் செய்த ஆனந்த் சீனிவாசன்.. என்னாச்சு? அவரே சொல்கிறார்
சென்னை: பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கடந்த வாரம் பேருந்தில் பயணித்த போட்டோக்கள் டிரெண்டிங் ஆனது. இதனிடையே இது குறித்துக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கியமான பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் ஆனந்த் சீனிவாசன்.. மற்ற பொருளாதார வல்லுநர்கள் உலக பொருளாதாரம் குறித்துப் பேசும் போது, வீடுகளில் செய்ய வேண்டிய சேமிப்பு குறித்துப் பேசி டிரெண்டானவர் ஆனந்த் சீனிவாசன்..
பொருளாதாரம், முதலீடு என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் கூட எப்படிச் சேமிக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார். இவரது வீடியோக்கள் இணையத்தில் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது.

ஆனந்த சீனிவாசன்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் இல்லை என்றால் குடும்பமே நடத்த முடியாது என்று கூறி டிரெண்டானவர் இவர்.. அதாவது 40 ஆயிரம் ரூபாய் சம்பளமும் 400 கிராம் தங்கமும் சென்னையில் திருமணம் செய்து கொள்ளக் கண்டிப்பாகத் தேவை என்றவர் அவர்.. இவரே புதிய வீடியோ ஒன்றில் இப்போது விலைவாசி எல்லாம் ஏறிவிட்டது 40 ஆயிரம் ரூபாய் எல்லாம் பத்தாதது.. 65 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்றவர்.
அது மட்டுமின்றி பல நேரங்களில்.. இவர் கூறும் தடாலடி சேமிப்பு டிப்ஸ்களை இணையத்திலும் கூட டிரெண்டாகும். இதனிடையே இவர் சமீபத்தில் பேஸ்புக்கில் சில போட்டோக்களை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அதாவது கடந்த வாரம், இவர் பேருந்தில் பயணித்த படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த படங்களை இணையத்தில் பலரும் பகிர்ந்தனர். அண்ணா நூலகத்தில் இருந்து அவர் ராயப்பேட்டை வரை பேருந்தில் பயணித்தாக பதிவிட்டிருந்தார்.

பஸ் பயணம்: ஆனந்த் சீனிவாசன் எவ்வளவு எளிமை பாருங்க.. எவ்வளவு பணம் இருந்தாலும் அண்ணா நூலகத்தில் இருந்து ராயப்பேட்டைக்குப் பேருந்தில் சென்றுள்ளார் என்று அவரது பாலோயர்ஸ் பலரும் புகழ்ந்தே வருகின்றனர். இருப்பினும், ஏன் திடீரென ஆட்டோவில் சென்றார் என்பது குறித்து பலரும் பல வித கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். இதனிடையே இதற்கான காரணத்தை அவரே தனது மற்றொரு யூடியூப் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
இளைஞர்கள் எப்படி திருணம் செய்ய வேண்டும் என்று அவர் வெளியிட்ட வீடியோவில் நெறியாளர், "நீங்க பெரிய ஸ்டேடஸில் உள்ளீர்கள்" என்கிறார். அதற்கு அவர், "நான் பெரிய ஆள் எல்லாம் இல்லை. பஸில் ஏறித் தான் வரேன்" என்கிறார். அது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஆனந்த் சீனிவாசன், "நான் எதுவுமே பண்ணல.. எனது காரை மனைவி எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.
என்னாச்சு: அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்றிருந்தேன். ஆட்டோவை கேட்டால் ராயப்பேட்டை வர மாட்டேன் என்றுவிட்டார்கள். ஊபர், ஓலாவிலும் கிடைக்கவில்லை. இப்படியே சுமார் 20 நிமிடங்கள் ஆகிவிட்டது. இதனால் அங்கேயே கூட்டம் கூடிவிட்டது. இதனால் என்ன செய்து என்று தெரியாமல் இருந்த போது தான், அங்கே 5சி பஸ் வந்தது.. நிறுத்த கையை போட்டேன். அவர்களும் நிறுத்தினார்கள். ஏறிட்டேன். வெறும் 8 ரூபாயில் முடிந்துவிட்டது" என்றார்.

அப்போது நெறியாளர், "ஆனந்த் சீனிவாசன் எப்படி செலவு செய்வார் தெரியுமா.. அவர் நம்மிடம் தான் சேர்த்து வைக்கச் சொல்லிச் சொல்கிறார். ஆனால், அவர் பயங்கரமாகச் செலவு செய்வார் என்கிறார்கள்.. ஆனால், நீங்கள் என்னடா என்றால் வெறும் 80 ரூபாய்க்கு ஆட்டோ டிரைவரிடம் அடிதடி செய்துள்ளீர்கள்" என்கிறார்.
கலகல பதில்: அதற்கு ஆனந்த் சீனிவாசன், "ஆமா, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து வர அதிகமாகக் கேட்டால் எப்படித் தர முடியும். மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். என்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும். காசை அள்ளிக் கொடுத்துவிட்டு நான் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும்" என்கிறார். இந்த வீடியோவும் இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications