ரஹ்மான் போட்ட 3 கண்டிஷன்! சாய்ரா பானு கேட்ட 2 கேள்வி! இருவரின் திருமணம் எப்படி நடந்தது ? ரீவைண்ட்
சென்னை: ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் அவர்களின் 29 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தான் ஏஆர் ரஹ்மான் - சாயிரா பானு ஆகியோரின் திருமணம் எப்படி நடந்தது? திருமணத்துக்கு ஏஆர் ரஹ்மான் போட்ட 3 கண்டிஷன் மற்றும் திருமணத்துக்கு முன்பாக சாய்ரா பானு கேட்ட 2 கேள்வி குறித்த சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல இசையமைப்பாளரும் ‛ஆஸ்கர்' விருது வென்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். இவரது மனைவிக்கு பெயர் சாய்ரா பானு. இவர்கள் 2 பேரும் கடந்த 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி திருமணம் செய்தனர்.

இந்த தம்பதிக்கு கதிஜா, ரஹிமா என்ற மகள்கள் உள்ளனர். அதேபோல் அமீன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தான் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
சாய்ரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானை பிரிவதாக அவரது அவரது வழக்கறிஞர் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாய்ரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானை விட்டு பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார். உணர்ச்சிப்பூர்வமான அழுத்ததற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எங்கள் இருவருக்கும் இடையே யாரும் பாலமாக வந்து ஒன்றிணைக்க முடியாது. வலி மற்றும் வேதனையுடன் இந்த முடிவை சாய்ரா பானு எடுத்துள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அவர்களின் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தான் ஏஆர் ரஹ்மானுக்கும், அவரது மனைவி சாய்ரா பானுவுக்கும் எப்படி திருமணம் நடந்தது? என்பது பற்றிய தகவலை இங்கே பார்க்கலாம். ஏஆர் ரஹ்மான் - சாய்ரா பானு ஆகியோரின் திருமணம் கடந்த 1995ம் ஆண்டு சென்னையில் நடந்தது.
இந்த திருமணத்துக்கு காரணமாக இருந்தவர் ஏஆர் ரஹ்மானின் தாய் கரீமா பேகம் தான். அதாவது ஏஆர் ரஹ்மான் தமிழ் திரையுலகில் 1992ம் ஆண்டில் தான் அறிமுகம் ஆகி இருந்தார். அவர் ரோஜா திரைப்படத்துக்கு இசையமைத்தார். இந்த திரைப்படம் ஹிட் அடித்தது. அதோடு ரஹ்மானின் இசை பெருமையாக பேசப்பட்டது.
அதன்பிறகு ஏஆர் ரஹ்மான் பிஸியானானர். அதிகமான படங்களுக்கு அவர் ஒப்பந்தம் செய்த காலத்தில் தாய் கரீமா பேகம், ஏஆர் ரஹ்மானுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். ஏஆர் ரஹ்மானுக்கு திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்தார். இருப்பினும் ஏஆர் ரஹ்மான் தான் பிஸியாக இருக்கிறேன். என்னால் எங்கேயும் வர முடியாது. நீங்களே எனக்கு ஒரு பெண்ணை பாருங்கள். நான் அவரை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதோடு 3 முக்கிய கண்டிஷன்களை மட்டும் தெரிவித்துள்ளார்.

அதில் முதல் கண்டிஷன் தனக்கு மனைவியாக வரும் பெண் நன்றாக படித்திருக்க வேண்டும். 2வது கண்டிஷன் அந்த பெண் நன்கு அழகாக இருக்க வேண்டும். 3வது கண்டிஷனாக அந்த பெண் பணிவாகவும், தன்மீது அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த கண்டிஷன்களை மனதில் வைத்து தான் ஏஆர் ரஹ்மானின் தாய் கரீமா பேகம் பெண் தேட தொடங்கினார்.
அப்போது தான் கரீமா பேகம், சாய்ரா பானுவை பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார். இவர்களின் திருமணம் 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி சென்னையில் நடந்தது.இந்த திருமணம் நடந்தபோது ஏஆர் ரஹ்மானின் வயது 27. சாயிரா பானுவின் வயது 21 ஆகும். திருமணத்துக்கு முன்பு சாய்ரா பானு மொத்தம் 2 கேள்விகளை ஏஆர் ரஹ்மானிடம் கேட்டு இருந்தார். அதாவது ‛‛திருமணத்துக்கு பிறகு ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்ளலாமா? என்று ஒரு கேள்வியையும், கார் தொடர்ந்து ஓட்டி கொள்ளலாமா? என்றும் அவர் கேட்டாராம்.
இதற்கு ஏஆர் ரஹ்மான் ஓகே சொன்ன பிறகே இருவரின் திருமணம் நடந்ததாக சாய்ரா பானு இண்டர்வியூ ஒன்றில் தெரிவித்து இருந்தார். பொதுவாக சாய்ரா பானு பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பது இல்லை. அதேபோல் இருவர் பற்றியும் கடந்த 29 ஆண்டுகளாக எந்த கிசுகிசுக்களும் வந்தது இல்லை. இத்தகைய சூழலில் அவர்கள் தங்களின் திருமண வாழ்க்கையை 29 ஆண்டுகளுக்கு பிறகு முடித்து கொண்டுள்ளனர். இது ஏஆர் ரஹ்மானின் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications