2 மேட்டர் + 3 பிளான்.. எடப்பாடிக்கு சிக்கல் போலயே.. "அவரை" வைத்து "தலை" போடும் கணக்கு.. ஒர்க்அவுட் ஆகுமா?

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் 2 அஸ்திரங்களை எடுத்துள்ளதாக தெரிகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி ஒரு ரூட்டை எடுத்தால், அதை முறியடிக்கும் வகையில் வேறு ஒரு புது ரூட்டை பிடித்து முன்னேறுகிறார் ஓபிஎஸ்.. அதிமுகவுக்குள் என்ன நடக்

கிறது? ஓபிஎஸ் பிளான்தான் என்ன?

இத்தனை நாளும் உள்ளுக்குள்ளேயே புகைந்து கொண்டிருந்த பொதுச்செயலாளர் பதவி விவகாரம், இந்த 4 நாட்களாகவே வெடித்து கிளம்பி உள்ளது..
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தரப்பினர் வெளிப்படையாகவே அதிருப்திகளை கொட்ட ஆரம்பித்துவிட்டனர்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஓபிஎஸ் ஒரு பக்கமும், எடப்பாடி மறுபக்கமும் கட்சியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதில், எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மையான ஆதரவுகள், கட்சிக்குள் கிடைத்து வருவதாக தெரிகிறது.. இது தெரிந்து ஓபிஎஸ், பிடிவாதத்தையும், எதிர்ப்பையும் காட்டி வருகிறார்.. இதையடுத்து, இப்போது இரு தரப்புமே அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக அவர்கள் வீடுகளில் பேசி வருகின்றனர்.

 எடப்பாடி டீல்

எடப்பாடி டீல்

இதனிடையே ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்த, எடப்பாடி டீமே முயன்று வருவதாகவும் செய்திகள் கசிகின்றன.. பொதுக்குழு கூட்டத்தன்று, அன்று மிகப்பெரிய பிரச்சனையே கட்சிக்குள் வெடிக்கலாம் என்கிறார்கள்.. இந்த விவகாரம் அடுத்து என்னவாகும்? ஓபிஎஸ் இதற்கு முன்பு வேறு எந்த விஷயத்துக்கும் இவ்வளவு பிடிவாதம் காட்டியதில்லையே? இந்த கறார்தன்மைக்கு என்ன காரணம்? என்னதான் நினைக்கிறார்? என்பது குறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது:

 2 பிளான்கள்

2 பிளான்கள்

"ஓபிஎஸ் 2 விஷயங்களில் ஸ்டிராங்காக இருக்கிறார்.. முதலாவதாக அவர் பெரிதும் நம்புவது, கட்சிக்குள் தனக்கான சட்டப்பூர்வமான அதிகாரத்தைதான்.. காரணம், அவர்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.. தன்னை மீறி எதுவுமே, தன் கையெழுத்து இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது என்பதுதான் அவரது ஆணித்தரமான நம்பிக்கையாக உள்ளது.. மற்றொன்று, கட்சிக்குள் தனக்கு முக்கியத்துவம் குறையும் பட்சத்தில், பாஜக துணையுடன் தேர்தல் ஆணையத்தை நாடவும் செய்வார்.. அப்படி சென்றால், நிச்சயம் சின்னத்தை முடக்க வாய்ப்பு உண்டு... ஆக இந்த 2 விஷயத்தில் எதை ஓபிஎஸ் கையில் எடுத்தாலும் அது, அதிமுகவுக்கு சிக்கல்தான்.

 புது ஐடியா

புது ஐடியா

ஆனால், எடப்பாடியோ, வேறுவிதமாக யோசிப்பதாக தெரிகிறது.. பொதுக்குழுவில், மெஜாரிட்டி ஆதரவாளர்களை வைத்து, இவர்களுக்குள்ளேயே ஒரு தீர்மானத்தையும் போட்டு, அதன்மூலம் ஓபிஎஸ்ஸை கட்சியைவிட்டே நீக்கலாம்.. அல்லது ஏற்கனவே இருக்கும், "ஒருங்கிணைப்பாளர்" என்ற ஒரே ஒரு போஸ்டிங்கை மட்டும் கொண்டு வரலாம் என்று கணக்கு போடுவதாக தெரிகிறது.. அதுவும் இல்லாவிட்டால், "பொதுச்செயலாளர்" என்ற போஸ்ட்டையே, மறுபடியும் கொண்டு வரவும் வாய்ப்புண்டு..

போஸ்டிங்

போஸ்டிங்

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் என்ற போஸ்டிங்கையே கலைத்துவிட்டால், பொதுச்செயலாளர் என்ற ஒரே ஒரு பதவி மட்டுமே இருக்கும்.. இதை வைத்து கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என்றுகூட எடப்பாடி யோசிக்கலாம்.. ஆனால், இது எல்லாமே அவ்வளவு சாத்தியமா என்று தெரியவில்லை.. சட்டரீதியாக எதிர்கொள்வது அல்லது டெல்லி சப்போர்ட்டை வைத்து எடப்பாடிக்கு அழுத்தம் தருவது, அல்லது சின்னத்தை முடக்குவது போன்ற பெரிய பெரிய ஐடியாக்களை முன்னெடுத்து ஓபிஎஸ் காய் நகர்த்தினால், அது அதிமுக கட்சிக்கு நன்மையை தராது" என்றனர். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் என்ற போஸ்டிங்கையே கலைத்துவிட்டால், பொதுச்செயலாளர் என்ற ஒரே ஒரு பதவி மட்டுமே இருக்கும்.. இதை வைத்து கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என்றுகூட எடப்பாடி யோசிக்கலாம்.. ஆனால், இது எல்லாமே அவ்வளவு சாத்தியமா என்று தெரியவில்லை.. சட்டரீதியாக எதிர்கொள்வது அல்லது டெல்லி சப்போர்ட்டை வைத்து எடப்பாடிக்கு அழுத்தம் தருவது, அல்லது சின்னத்தை முடக்குவது போன்ற பெரிய பெரிய ஐடியாக்களை முன்னெடுத்து ஓபிஎஸ் காய் நகர்த்தினால், அது அதிமுக கட்சிக்கு நன்மையை தராது" என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+