Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக இதை எதிர்பார்த்து இருக்காதே! மோடி கூட நினைச்சு இருக்க மாட்டாரு! தாமரையை திணறடித்த "6 விஷயங்கள்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் 6 முக்கியமான விஷயங்கள் பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளன.
லோக்சபா தேர்தல் பிரச்சாரம் என்று வந்துவிட்டால் அதில் பாஜகவின் பிளானிங்கை அடித்துக்கொள்ளவே முடியாது. இல்லாத விஷயத்தை கூட திடீரென இழுத்து வந்து அதை தீவிரமாக பேசி பெரிதாக்கி அதை பிரச்சாரத்தின் மையமாக்குவது பாஜகவின் ஸ்டைல்.. உதாரணமாக தமிழ்நாட்டில் கச்சத்தீவு பிரச்சனை.

பல வருடமாக இருக்கும்.. பெரிதாக மக்கள் மத்தியில் பேசு பொருளாக இல்லாத கச்சத்தீவு பிரச்னையை திடீரென பாஜக எடுத்து வந்து அதை மையமாக வைத்து பிரச்சாரம் செய்தது. அது வெற்றிபெறுமா இல்லையா என்பதெல்லாம் வேறு விஷயம். narrative set செய்வது என்று அரசியலில் சொல்வார்கள். அதில் பாஜக கொஞ்சம் வலிமையான கட்சிதான். ஆனால் இந்த முறை பாஜக 6 முக்கியமான விஷயங்களில் லோக் சபா தேர்தலில் சறுக்கி உள்ளது.

What are the 6 things that become a challenge for BJP in lok sabha election 2024

1. காங்கிரஸ் வாக்குறுதி: காங்கிரஸ் வாக்குறுதியின் சில அம்சங்கள் பாஜகவிற்கு பெரிய பிரஷர் ஆகி உள்ளது. செஸ் வரி வசூலில் மாநிலங்களை ஏமாற்றும் பாஜகவின் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மாநிலங்களுக்கு அதன் உரிமைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலங்களிடம் பிடுங்கப்பட்ட நிதிகள் மீண்டும் வழங்கப்படும். நீட், CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை. மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாணவர் சேர்க்கையை கடைபிடிக்கலாம். மாநிலங்களில் விருப்பப்படி இதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

2. இடஒதுக்கீடு: காங்கிரசின் இடஒதுக்கீடு பிளான், சாதி கணக்கீடு போன்ற பிளானும் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இது பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளது. நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும். ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்தது பாஜகவிற்கு எதிராக மாறி உள்ளது.

3. ராஜ்புத் எதிர்ப்பு: பீகார், குஜராத், உத்தர பிரதேசத்தில் பாஜகவின் நிலைமை கவலைக்குரியதாக மாறி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்து வாக்குகளால் பெரும்பான்மை இடங்களை வென்ற குஜராத், உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் நிலைமை மோசமாக மாறி உள்ளது.

இப்பகுதியில் இப்போது சூழ்நிலைகள் வேகமாக மாறி வருகின்றன. ராஜ்புட் உள்ளிட்ட சில ஆதிக்க சாதியினர் அங்கே பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளனர். இவர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை வெளிப்படையாகக் காட்டி பாஜகவிற்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.

முக்கியமாக ராஜபுத்திரர்கள், தியாகிகள் மற்றும் சைனிகள் உட்பட இந்த ஆதிக்க சாதியினர் குஜராத், உத்தரபிரதேசத்தில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய தொடங்கி உள்ளனர். ராஜ்புத் உள்ளிட்ட சத்திரிய வம்சத்து மன்னர்கள் இஸ்லாமியர்களுடன் நெருக்கமாக , அடிமை போல இருந்தனர். இஸ்லாமிய மன்னர்கள் கொடுத்ததை வைத்து ஆட்சி செய்தனர். தங்கள் பெண்களை கூட இஸ்லாமியர்களுக்கு மனம் முடித்து கொடுத்தனர் என்று விமர்சனம் செய்யும் தொனியில் மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா பேசி இருந்தார். பாஜகவை சேர்ந்த மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா இதன் மூலம் சத்திரிய வம்சத்து அரசர்களை அவமதித்துவிட்டதாக சத்திரியர் இடையே விமர்சனம் வைக்கப்பட்டது.

சமீபத்தில் அங்கு 'சத்திரிய' சமூகத்தினர் பாஜகவிற்கு எதிராக பஞ்சாயத்து நடத்தினர். சத்திரிய சமூகத்தின் நலன்கள் மற்றும் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை 'எதிர்ப்பது' பற்றி இதில் ஆலோசிக்கப்பட்டது. பாஜகவிற்கு எதிராக செயல்பட வேண்டும் என்று சத்திரிய ஜாதி பிரிவை சேர்ந்த உறுப்பினர்களுக்கு இந்த பஞ்சாயத்தில் அறிவுறுத்தப்பட்டது.

4. மத விவகாரம் எதிராகிவிட்டது: பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் பற்றி மேடைக்கு மேடை பேசுவது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் வாக்குறுதி குறித்தோ, 10 ஆண்டுகள் சாதனை பற்றியோ பேசாமல் மோடி திடீரென இஸ்லாமியர்களுக்கு எதிரான புதிய பிரச்சார வியூகத்தை கையில் எடுத்து இருப்பது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானில் பேசிய மோடி, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள்.

இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. "அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது,​​தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.

கடுமையான சர்ச்சை: இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா. இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள்.

பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மங்களத்தை கூட விட்டுவைக்காது, என்று பிரதமர் மோடி கடுமையாக பேசி இருக்கிறார். மோடியின் இந்த பேச்சு பாஜகவிற்கு எதிராகவே திரும்ப தொடங்கி உள்ளது. பாஜகவிற்கு இந்த பிரச்சாரம் பலன் தருவதற்கு பதிலாக நெகட்டிவ் பிரச்சாரமாக மாறி உள்ளது.

5. ரேவண்ணா புயல்: கர்நாடகா தேர்தலை மட்டுமின்றி.. இந்தியாவையே உலுக்கி உள்ள ரேவண்ணா செக்ஸ் வீடியோ விவகாரம் பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக கட்சிக்கு ஏற்கனவே எச்சரிக்கை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது எச் டி ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் ரேவண்ணாவிற்கு இடம் கொடுக்க கூடாது. அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க கூடாது என்று ஜேடிஎஸ் கட்சி, பாஜக இரண்டிற்கும் எச்சரிக்கை சென்றுள்ளது.

ஆனால் உள்ளூர் நிர்வாகிகள் கொடுத்த இந்த எச்சரிக்கையை இரண்டு பேருமே கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. பிரஜ்வால் ரேவண்ணாவிற்கு கர்நாடகாவில் ஹசன் தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இவருக்கு இடம் கொடுத்தால் அது தேர்தலில் பெரிய அளவில் இடியாக மாறும் என்று உள்ளூர் நிர்வாகிகள் எச்சரித்தும் கூட மோடி பிரஜ்வால் ரேவண்ணாவை சந்தித்து அவருடன் போட்டோவும் எடுத்துள்ளார். பாஜவிற்கு இது பெரிய டேமேஜாக மாறி உள்ளது. முன்பே எச்சரிக்கை வந்தும் இதில் பாஜக சுதாரிக்காமல் இருந்தது அந்த கட்சிக்கே எதிராக மாறி உள்ளது.

என்ன விவகாரம்: ஜேடிஎஸ் எனப்படும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் எச் டி தேவகவுடாவின் பேரன், எச் டி ரேவண்ணாவின் மகன் எம்பி ப்ரஜ்வால் ரேவண்ணாவின் வீடியோக்கள் வடஇந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளன.

கர்நாடகாவை உலுக்கிய எம்பி ப்ரஜ்வால் ரேவண்ணாவின் வீடியோக்கள் தற்போது உத்தர பிரதேசம், பீகாரில் தீவிரமாக பரவி வருகிறது. அங்கே உள்ள வாட்ஸ்அப் குழுக்களில் இந்த வீடியோக்கள் புயலை கிளப்பி உள்ளன.

பொதுவாக பாஜக கட்சிக்கு கை கொடுப்பதே வாட்ஸ் ஆப்தான். ஆனால் அதே வாட்ஸ்அப் தற்போது பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளது. பாஜகவிற்கு எதிராக எம்பி ப்ரஜ்வால் ரேவண்ணாவின் செக்ஸ் ஸ்கேண்டல் வீடியோக்கள் உத்தர பிரதேசம், பீகாரில் அரசியல் அஸ்திரமாக் மாறி உள்ளது.

6. தலைவர்கள் கைது செண்டிமெண்ட்: லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆகியோர் முன்னிலை வகிப்பது பாஜகவிற்கு இமேஜ் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

எப்போதும் தேர்தல் நேரத்தில்.. பெண்கள் இமேஜ் கட்சிகளுக்கு கைகொடுக்கும் . ஜெயலலிதா அசைக்க முடியாத தலைவராக இருக்க அவருக்கான பெண்கள் ஆதரவு முக்கிய காரணம். மம்தா பானர்ஜிக்கும் இப்போது அதுவே பொருந்தும். பெண்களிடம் நல்ல அபிமானம் பெற்ற ஆண் தலைவர்களுக்கும் தேர்தல் வெற்றிகள் எளிதாக கைகூடும்.

அதுவே பெண்களின் கண்ணீர், கோபம் போன்ற சென்சிடிவ் விஷயங்கள் ஒரு சில கட்சிகளுக்கு எதிராக அப்படியே திரும்பிய வரலாறுகளும் கூட உண்டு. அப்படித்தான் இப்போது 2 பெண்களின் கண்ணீர் பாஜகவை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

அடுத்தடுத்த கைது: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய விசாரணை அமைப்புகளின் தலையீடுகள் அதிக அளவில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. முக்கியமாக அடுத்தடுத்து பல்வேறு மாநில முதல்வர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

தற்போது ஜார்கண்டில் லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் முன்னிலை வகித்து வருகிறார். கட்சி கூட்டங்கள் தொடங்கி தேர்தல் திட்டங்கள் வரை பலவற்றையும் கல்பனா சோரன் முன்னின்று நடத்தி வருகிறார். அங்கே ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் புதிய முகமாக கல்பனா சோரன் மாறி உள்ளார்.

லோக்சபா தேர்தலுக்காக பிரச்சார கூட்டம் ஒன்றில் கல்பனா சோரன் கலந்து கொண்டார். அதில் அடிக்கடி கண்ணீர் விட்டபடி உடைந்து அழுது பேசினார் கல்பனா சோரன். இவருடன் தற்போது டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலும் இணைந்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார். இதில்தான் கெஜ்ரிவால் கைதாகி உள்ளார்.

இதை எதிர்த்து டெல்லியில் நேற்று நடந்த போராட்டத்திலும் சுனிதா கெஜ்ரிவால் - கல்பனா சோரன் 2 பேரும் ஒன்றாக கலந்து கொண்டனர். அதோடு இவர்களுடன் சோனியா காந்தியும் உடன் இருந்தார். பெண்கள் இடையே வலுவான மெசேஜ் ஒன்றை கொடுக்கும் விதமாக இவர்கள் ஒன்றாக அமர்ந்து இருந்தனர். பாஜகவிற்கு இதுதான் சிக்கலாக மாறி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+